English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Combatant
n. பொருநர், போரிடுபவர், சண்டையில் ஈடுவடுபவர், (பெ.) போரிடுகிற, சண்டையில் ஈடுபடுகிற, போர்நாட்டமுள்ள.
Combative
a. எதிர்ப்புச் செய்கிற, சண்டைக்குணமுள்ள, போர் மனப்பான்மையுடைய.
Comber
-1 n. கம்பளி சிக்கெடுப்பவர், தூய்மையாக்குபவர், வார் கருவி, சுருள்பேரலை, நுரையுடைய நீண்ட அலை.
Comber
-2 n. கடல் மீன் வகை, முள்மீன் இனம்.
Combination
n. இணைதல், ஒன்றுசேர்தல், செயற்கூட்டுறவு, தனிப்பொருள்களின் இணைப்பு, பக்கவண்டி, இணைப்புள்ள இயங்கு மிதிப்பொறி வண்டி, பொதுநோக்கிற்காக ஒன்றுசேர்ந்த குழு, சேர்மானம்.
Combination-room
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உறுப்பினர்களின் பொது அறை.
Combinations
n. pl. கையில்லாத சட்டையும் குறுங்கால் சட்டையும் இணைந்த முழு உள்ளாடைத்தொகுதி, (கண.) சேர் வகைகள், குறிப்பிட்ட உருக்கள் குறிப்பிட்ட தொகையடுக்காக இணையும் வகைப்படிவங்கள்.
Combine
-1 n. வணிகச்சங்களின் கூட்டு நிறுவனம், பொறுப்பாட்சிக் குழு, அறுவடைக் கருவியோடு போரடிக்கும் கருவியும் இணைந்த கூட்டுப்பொறி.
Combine
-2 v. ஒருங்கிணை, ஒன்றுசேர், திரள், ஒன்றுகூடு, நெருங்கித் தொடர்புகொள், ஒத்துழை, (வேதி.) இணைத்துருவாக்கு, இணைந்து உருவாகு.
Combings
n. pl. சீவப்பட்ட மயிர்க்கூளம், வாரப்பட்ட இழைக்கூளம்.
Comb-out
n. தேடிப்பார்த்துத் தேவையற்றதை நீக்கும் முறை, இராணுவப் பணிக்குத் தகுதியுடையவர்களைத் தேடிப் பிடிக்கும் முறை.
Comburgess
n. தன்னாட்சி பெற்ற நகரத்தின் உடன் உரிமைக் குடிமப்ன்.
Combust
n. சுட்டெரிக்கப்பட்ட பொருள், (பெ.) கதிரவனால் எரிக்கப்பட்ட, கோள்கள் வகையில் கதிரவனிடமிருந்து வரும் கடுவெப்பு எல்லைக்கு (க்ஷ் 1க்ஷீ2 பாகை அளவுக்கு) உட்பட்ட.
Combustibility
n. எரியும் தன்மை.
Combustible
n. தீப்பற்றி எரியக்கூடியபொருள், (பெ.) தீப்பற்றி எரியக்கூடிய, எளிதில் தூண்டிவிடப்படத்தக்க.
Combustion
n. எரிதல், தீயின் எரிப்பாற்றல், உள்ளெரிதல், கருகுதல், உயிரகக் கலப்பால் மாறுபடல், குமுறல், குழப்பம்.
Combustive
a. எளிதில் தீப்பற்றும் தன்மையுள்ள, தீப்பற்றத்தக்க.
Comcissive
a. மோதும் ஆற்றலுடைய, அதிர்ச்சி விளைவிக்கும் இயல்புடைய.
Come
-1 n. வா, அணுகு, அணுகிவா, நிலைக்கு வந்துசேர், வௌதப்படு, வந்தணை, கொணரப்பெறு, வந்து விழு, வந்திறங்கு, வந்துறு, நிகழ், நேரிடு, ஆகு, உண்டாகு, மொத்தமாகு, எட்டு, அடை, ஆகத்தொடங்கு, உருவாகு, செயலாற்று.
Come
-2 int. ஊக்குரை அல்லது எதிர்ப்பு அல்லது கடிதம் அல்லது தடை குறிக்கும் சொல்லசை.