English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Clarity
n. துலக்கம், தௌதவு.
Clarkia
n. பகட்டான மலர்களையுடைய செடியினம்.
Clary
n. காய்கறித் தோட்டப் பூண்டு வகை.
Clash
n. மோதல் ஒலி, மோதுதல், கைகலப்பு, சச்சரவு, கருத்து வேற்றுமை, முரண்பாடு, (வி.) மோதொலி எழுப்பு, எதிர்த்து நில், முட்டி மோது, முரண்பாடு, சிக்கற்படு.
Clasp
n. பிடிப்பு, பற்றுதல், அணைப்பு, தழுவுதல், கைகுலுக்கல், கொளுவி, அள்ளு, கச்சு இறுக்கி, ஆடை ஊக்கு, (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வௌளிப்பட்டை, (வி.) நெருக்கிப்பிடி, பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு, தழுவு, அள்ளு வைத்துச் செருகு, அள்ளுவைக் கொண்டு பிணை.
Clasper
n. பற்றிப்பிடிப்பவர், பற்றிப்பிடிக்கும் பொருள், (தாவ.) செடியின் தளிர்க்கை, (வில.) பற்றிப் பிடிக்கும் உறுப்பு.
Clasp-knife
n. மடக்குக் கத்தி.
Class
n. பள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
Classable
a. வகைப்படுத்தத்தக்க, வகையுள் சேர்க்கத்தக்க.
Class-conscious
a. வகுப்பு உணர்வுள்ள, சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
Classic
n. புகழ்சான்ற எழுத்தாளர், தலைமைசால் கலைஞர், பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர், பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர், புகழ்சான்ற ஏடு, பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர், செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர், (பெ.) முதல் தரமான, ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய, பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய, பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த, பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த, கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய, பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌதமைக் கட்டமைதி வாய்ந்த, பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய, பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Classical
a. ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய, முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய, பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த, பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட, பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய, தூய இன்னௌதமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
Classicism
n. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிமரபு, பண்டைய கிரேக்க இலத்தீனக்கலை இலக்கிய மரபுப் பண்பு, பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறைப் புலமை, பண்டைய கிரேக்க ரோமமொழிகள் கலை கல்விமுறை ஆதரவு.
Classicist
n. பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர், பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர், பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.
Classicize
v. முதல்தரமானதாக்கு, பண்டைய கிரேக்க இலத்தீன மொழிப்பாணியைப் பின்பற்று.
Classicolatry
n. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக் கலைத்துறையில் ஈடுபாடு.
Classics
n. பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கலைத் துறைகளின் தொகுதி, உயர்தனிச் செம்மொழித்துறை.
Classifiable
a. வகைப்படுத்தத்தக்க.
Classification
n. வகைப்படுத்துதல், வகுப்பு முறை, வகுப்பொழுங்கு.
Classified
a. வகைப்படுத்தப்பட்ட, பாட்டைகள் வகையில் அரசியல் பொருள் உதவிக்கு உரிமையுடைய.