English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Aspirate
n. மூச்சொலி, மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து, மூச்சொலிக்குறியீடு, (பெ.) மூச்சொலியான, (வினை.) உயிர்ப்புடன் ஒலி, காற்றை உறிஞ்சியிழு.
Aspiration
-1 n. வேணவா, பேரார்வம், நாட்டம், விழைவு.
Aspiration,
-2 n. முழு உயிர்ப்புடன் ஒலித்தல், மூச்சொலி கலந்த மெய்யொலி, காற்றை உறிஞ்சியிழுத்தல்.
Aspirator
n. காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Aspiratory
a. மூச்சுக்குரிய.
Aspire
v. அவாவு, விழை, ஆர்வத்துடன் விரும்பு.
Aspirin
n. வெப்பாற்றி, காய்ச்சலையும் நோய்களையும் அகற்றும் மருந்து.
Aspout
adv. கொப்புளிக்கும் நிலையில், பொங்கி வழிந்து.
Asprawl
adv. கைகால் பரப்பிக் கொண்டு.
Asquat
adv. உட்கார்ந்துகொண்டு.
Asquint
adv. சாய்வாக, கடைக்கண் பக்கமாக.
Assagai
n. தென் ஆப்பிரிக்கக் குடிகள் வழங்கும் காழ் மரஈட்டி, வேல்கம்பு, (வினை.) ஈட்டி ஓச்சிக் காயப்படுத்து, வேல்கம்பெறிந்து கொல்லு.
AssaI
-1 adv. (இசை.) மிக.
AssaI
-2 n. தென் அமெரிகக்ப பனைவகை, பனைவகையின்காய், பனைவகையின் குடிதேறல்.
Assail
v. எதிர், தாக்கு, முனைந்து முயல், கேள்விகளால் திகைக்கவை.
Assailable
a. தாக்குதற்கு இடம் தருகிற.
Assailant
n. தாக்குபவர், எதிரி.