English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Apollyon
n. பிசாசு, நாசகாரி, சாத்தான்.
Apologetic, apologetical
a. குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற, செய்ததற்கு இரங்கும் இயல்புடைய, தவறுக்குக் காரணங்காட்டுகிற.
Apologetics
n. தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
Apologia
n. தன்கோள் விளக்கும் எழுத்துமூலம்.
Apologist
n. இரங்கியுரைப்பவர், வாதம் செய்து தன் சமயம் ஆதரிப்பவர், பட்டிமன்றம் ஏறித் தன்கோள் நிறுவுபவர்.
Apologize
v. இஜ்ங்கியுரை, காப்பு விளக்கங்கூறு.
Apologue
n. நீதிக்கதை, கட்டுக்கதை, விலங்குகதை.
Apology
n. செய்ததற்கு இரங்கல், குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல், மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல், சமாதானம், விளக்கம், வாத விளக்க ஆதாரம், பெயருக்குத் தகுதியற்ற ஆள், கண்துடைப்புப்பொருள்.
Apopemptic
a. பிரிவு குறித்த, பிரிவுபசாரமான.
Apophthegm
n. பொருள் பொதிந்த உரை, செறிமொழி.
Apophthegmatic
a. சுருங்கிய செறிமொழிகளாலான.
Apoplectic, apoplectical
a. வலிப்புநோய்க் குரிய, வலிப்புநோய் விளைவிக்கிற, வலிப்புநோய் கண்டுள்ள, வலிப்பு நோய்க்குள்ளாகும் பாங்குடைய.
Apoplexy
a. வலிப்பு நோய், சன்னி, மூளையின் குருதிப்பெருக்கினால் பெரும்பாலும் விளைகிற உவ்ர்ச்சி செயல் ஆகியவற்றின் இழப்பு.
A-port
adv. துறைமுகத்தின் பக்கத்தில், துறைமுகப்பக்கம் நோக்கி.
Aposematic
a. (வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த, எச்சரிக்கிற.
Aposiopesis
n. வாசகத்தின் நடுவில் திடீரென நிறுத்தி உணர்ச்சி அல்லது ஆற்றல் பெருக்கிக் காட்டும் அணிமுறை.
Apositia
n. உணவு வெறுப்பு.
Apostasy
n. கொள்கை மீறுகை, கட்சிமாறுதல், சமயஎதிர்ப்பு, சமயத்தலைமையை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தல், கடமை தவறுதல்.
Apostate
n. சமயப்பகைவன், பழைய கொள்கைகளைக் கைவிடுபவன், (பெ.) சமயக் கோட்பாடுகளுக்கடங்காத.
Apostatic, apostatical
a. சமயத்தைத் துறக்கிற, கொள்கை மீறுகிற.