English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Antelope
n. மானியல் ஆட்டுவகை, மறிமான, மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
Antemeridian
a. நண்பகலுக்கு முந்திய, முற்பகல் சார்ந்த.
Antemundane
a. உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட, உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Antenatal
a. பேறுகாலத்துக்கு முற்பட்ட.
Antenati
n.pl. குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர், ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர், அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
Antenna
n. உணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Antennal
a. உணர்கொம்பினுடைய, உணர்ச்சியுறுப்புக்குரிய.
Antennary
a. உணர்கொம்பியல்புடைய, உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
Antenniferous
a. உணர்கொம்பு தாங்கிய.
Antenniform
a. உணர்கொம்பு வடிவான.
Antenuptial
a. திருமணத்துக்கு முன் நிகழ்ந்த, திருமணத்துக்கு முந்திய.
Antependium
n. பலிபீடத்துக்கு முன்னாலுள்ள திரை.
Antepenult
n. ஈற்றயல் அடுத்தது, கடையிரண்டு அடுத்தது.
Antepenultimate
n. ஈற்றயலடுத்தது, (பெ.) ஈற்றயல் அடுத்த, ஈற்றயலுக்கு முன்னான.
Ante-post
a. பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
Anteprandial
a. உண்டிக்கு முந்திய, சாப்பாட்டுக்கு முற்பட்ட.
Anterior
a. காலத்தால் முற்பட்ட, முந்திய, முன்நிகழ்வான, முன்புறமான, முன்பக்கமான, (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Anteriority
n. காலத்தால் முந்தியது, முன்புறம் இருத்தல், முன்னிடம்.
Ante-room
n. முப்ப்பு அறை, முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
Anthelion
n. ஒண்ணிற முகில் வளையம், முகில்உறைபனிப்படலம் ஆகியவற்றிற்கு அப்பால் கதிரவ்ன ஔதபடுவதால் ஏற்படும் வண்ண அருகுவளையம்.