English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reckoner
n. கணக்கிடுபவர், கணக்கீட்டு வாய்ப்பாடு, கணிப்புச்சுவடி,.
reckoning,
n. எண்ணுதல், கணக்கிடுதல், கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல், சாராயக்கடை விலைப்பட்டி, கணக்குத் தீர்த்தல், கணக்குத் தீர்ப்பு.
reclaim
n. திருத்துநிலை, மீட்புநிலை, பண்படுத்தப்படும் தகுதி, (வினை) பழைய நிலைக்குக் கொண்டுவா, மீட்டும் நன்னிலைப்படுத்து, தீமை ஒழித்துச் சீர்ப்படுத்து, காடு கெடுத்து நாடாக்கு, பண்படுத்து., நாகரிக நிலைக்குக் கொண்டுவா, சாகுபடியின் கீழ்க் கொண்டுவா, குற்ற நீக்கித் திருத்து, தீநெறியினின்று மீட்டு ஒழுக்கநெறிப் படுத்து, மீட்டுங்கோரு.
reclaimable
a. பண்படுத்தத தக்க, சீர்திருத்தக் கூடிய, மறுபடியுங் கோரத்தக்க.
reclamation
n. இயல்நிலை மீட்டல், நன்னிலை மீட்பு, மீட்கப்பட்ட நிலை, நிலச்சீர்த்திருத்தம், ஆக்க மேம்பாடு, ஒழுக்கநிலைத் திருத்தப்பாடு, மறுதிருத்த ஆக்கம், கைதிகளின் மறுசீராக்கம், மறு கோரிக்கையாளர் மனு, அனைத்து நாட்டுச் சட்டம் வகையில் அயலரசிடம் அரசு கோரும் மீட்டொப்படைப்புக் கோரிக்கை.
reclame
n. எப்படியும் தன்னை நாடறியச் செய்வித்துக் கொள்ளுங் கலைத்திறம்.
reclinate
a. (தாவ) கீழ்நோக்கி வளைந்துள்ள.
recline
v. சாய், சாய்ந்து கிடக்கும்படி செய், நன்கு சாய்ந்து படுத்து ஒய்வுகொள், பின்புறமாகச் சாய்ந்து கிட, ஒருக்கணித்துச் சாய்வாகப் பரத்திரு.
reclothe
v. மீண்டும். உடை அணிவி, புதிதாக ஆடை அணிவி, புதிதாக மேற்கொள்ளுவி.
recluse
n. ஆண்டி, துறவி, பெண்துறவி, ஒதுங்கி வாழ்பவர், தனித்து வாழ்பவர், தனிவாழ்வுப் பழக்கமுடையவர், (பெயரடை) ஒதுங்கியிருக்கும் பாங்குள்ள, தனித்து வாழ்கிற.
recoal
v. கப்பல் முதலியவற்றில் மீண்டும் நிலக்கரி நிரப்பு, கப்பலுக்கு மீண்டும் நிலக்கரி வழக்கியுதவி.
recog,nizant
நன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற, தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற, ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற, எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற.
recognition
n. ஏற்பு, அங்கீகாரம், தெரிந்துகொள்ளுதல், அறிந்துகொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட நிலை, ஒப்புக்கொள்ளுதல், நிலையினை ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொண்டதற்கான சைகை-அடையாளம், அல்லது குறிப்பு.
recognizance
n. குறிப்பிட்ட செயலைச் செய்வதாக அல்லது செய்யாமலிருப்பதாக ஒருவர் நீதிமன்றத்துக்கு அல்லது குற்றநடுவர்முன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் சட்டக் கட்டுப்பாட்டுப் பத்திரம், குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அல்லது செய்யாமலிருப்பதாக ஈட்டுப்பணையமாகச் செலுத்தப்படும் பணம்.
recognize
v. கண்டுணர், அடையாளங் கண்டுகொள், இனங் கண்டுகொள், இன்னார் என்பதை அறி, இயல்பு கண்டறி, தகுதி காண், தகுதி ஒப்புக்கொள், பாவித்து நடத்து, ஏற்பிசைவளி, ஏற்பிசைவு தெரிவி.
recoil,
n. எதிர்த்தாக்கு, மோதி எதிர்த்துத்துள்ளும் வசை, இயல் வெறுப்புணர்ச்சி, அதிர்ச்சிவேகம், (வினை) எகிறியெழு, எதிர்த்துத்துள்ளு, துப்பாக்கி வகையில் வேட்டினால் துள்ளி எதிர்த்தடி, எதிர்த்தாக்கு விசையினால் பின்னுக்கு உந்தப்பெறு, கடு வெறுப்புக்கொள்ளு, அதிர்ச்சியுற்றுப் பின்னடை.
recoin
v. மறு கம்பட்டஞ்செய், புதிதாகக் காசு பொறி, புதிதாக உருவாக்கு.
recoinage
n. புதிதாகக் கா பொறித்தல், மீண்டும் உருவாக்கப்பட்ட பொருள்.
recollect
v. நினைத்துப்பார், நினைவுபடுத்திப்பார், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர் நினைவில் வைத்டதுக்கொள், ஞாபபகப்படுத்திக்கொள், சூழல்மீது கவனந் திருப்பு, உணர்ச்சிகளை ஒருநிலைகப்படுத்து, கருத்துக்களை ஒருமுகப்படுத்துவி.