English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
La
n. (இசை.) மேற்பாலையில் ஆறாவது இசைமானம் அல்லது பண்.
laager
n. படைவீடு, வண்டிகளை வட்டமாக நிறுத்தி வைத்து அமைத்த கூடாரம், படைத்துறைக்கவச ஊர்திகளின் தங்கலிடம், (வினை) வண்டிகளை வட்டமாக நிறுத்து வைத்துக் கூடாரம் அமை, வண்டி வட்டக்கூடாரங்களில் ஆட்களைத் தங்கவை.
labarum
n. ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
labefaction
n. நடுக்கம், தளர்ச்சி, வலுக்குறைவு, வீழ்ச்சி.
label,
n. தாள் நறுக்கு, முகப்புவரிச்சீட்டு, பொருட்பெயர்-பண்பு-வகை-உடையவர் பெயர்-செல்லுமிடம் முதலிய இன்றியமையா விவரங்களைத் தாங்கிய அடையாளத் துண்டுக்குறிப்பு, வகை விவரத்துணுக்கு, தற்குறிப்பு அடை மொழிப்பெயர், ஒட்டுப்பொறிப்புத்தலை, தலைச்சின்னம், (வினை) பொருட்களின் மேல் பெயர் விவரச்சீட்டை இணை, தலைச்சின்னத்தை ஒட்டு, இனவாரியாகப் பிரித்து ஒதுக்கிக் குறிப்பிடு.
labia
n. pl. (ல.) (உள்.) இதழ்கள் போன்ற பெண்குறியின் பகுதிகள்.
labial
n. இதழ் ஒலி, உதடுகளின் துணையால் ஒலிக்கப்படும் எழுத்து, (பெ.) இதர்பற்றிய, இதழ்போன்ற, உதடுகள் போன்று செயலாற்றுகிற, உதடுகளால் ஒலிக்கப்பெறுகிற.
labiate
n. (தாவ.) உதடனைய இதழ்களுடைய மலர்வகை, உதடு போன்ற இருபிரிவாகப் பிரிந்த புற இதழ்வட்டமுடைய செடிவகை, (பெ.) உதடனைய இதழ்களுடைய, உதடு போன்றபுல்லிவட்டங் கொண்ட, இதழ்கள் போன்ற.
labile
a. (இயற்., வேதி.) நிலையற்ற, நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய.
labio-dental
a. உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற.
labium
n. (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி.
Laboratory
ஆய்வகம், ஆய்வுக்கூடம்
laborious
a. விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற.
labour
-1 n. உழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு, (வினை) உழை, கடுமுயற்ச்சி செய், கடு உழைப்பில் ஈடுபடு, முனைந்து முயல், கடுந்துயருறு, துன்பம் அனுபவி, பிள்ளைப்பேற்று நோவுறு, கப்பல் வகையில் உழல், இடரெதிர்த்துப் போராடு, நுணுகி விரிவுபட எடுத்துரை, கடும் உழைப்புக்காட்டு, பேருழைப்பாற்செயற்கைவிளைவு உண்டுபண்ணு, இடர்ப்பட்டுமெல்ல மெல்லஇயங்கு, (செய்.) நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபடு.
labour-market
n. தேவைக்கேற்பத் தொழிலாளர் கிடைக்கத் தகுந் சமுதாய நிலைக்களம்.
labourer
n. உழைப்பவர், தொழிலாளி, பாட்டாளி.
labourite
n. தொழிற்கட்சி உறுப்பினர், தொழிற்கட்சிச் சார்பாளர்.
Labrador dog, Labrador retriever
n. காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை.
labret
n. அழகுக்காக உதட்டில் செருகிக் கொள்ளப்படுஞ்சிறு கிளிஞ்சல் அல்லது எலும்பு.
laburnum
n. ஒளிமிக்க மஞ்சள்நிற மலர்க்கொத்துக்களைக் கொண்ட சிறு மரவகை.