English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
recidivism
n. மீண்டுங் குற்றஞ் செய்யத் தலைப்படும் பான்மை.
recidivist
n. திரும்பக் குற்றஞ்செய்யத் தலைப்படுவோர்.
recipe
n. முறைப்பட்டி, சமையல் துறையில் சேர்மானங்களின் பெயரும் அளவும் முறையியும் வழங்கும் குறிப்பு, மருந்துக் குறிப்பு, குறிப்பின்படியான மருந்து, செயல்சாதனம், வகைதுறைஏற்பாடு, சூழ்திறம், உபாயம்.
recipiency
n. பெறுதல், ஏற்பு, ஏற்கும் பான்மை, பெறுநிலை, ஏற்பவர் நிலை, மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு.
recipient
n. பெறுநர், எதிர்வனர், ஏற்றுக்கொள்பவர், (பெயரடை) விரைவில் கருத்தில் வாங்கிக்கொள்ளக்கூடிய.
reciprocal
n. எதிரிடை, சரி எதிரீடு, (கண) சினைமாற்று., பின்னத்தை முழு எண் ஆக்கவல்ல பெருக்கெண், (பெயரடை) இருமையுள் எதிரெதிடிர் அளாவிய, கொண்டுகொடுப்புப் பாங்கான, பரஸ்பரமான, செயல் வகையில் எதிர்தரவான, மறுதலைச் சரியீல்ன, அதே வகையில் எதிரீல்ன, (இலக்) சொல்வகையில் எதிரெதிர்த் தொடர்பு குறிப்பதான, (கண) சினைமாற்றான, எண் வகையில் பின்னத்தைப் பெருக்கி முழு எண் ஆக்கவல்ல.
reciprocate
v. கொண்டு கொடுப்புச் செய், ஏற்றெதிரிடை, செய், பரிவருத்தனைசெய், இருவர் அல்லது இருபொருள் வகையில் தம்முள் செயல் எதிர்ச்செயலாற்று, எதிரெதிர் அளாவு, சரிசமமாகத் திருப்பிக்கொடு, ஏற்றவாறு கைம்மாறு செய், செய்ததே பதிலுக்குச் செய், (இயந்) தம்மிடை மாறிமாறிச் செயற்படு, மாறி மாறி எதிரெதிரியங்கு.
reciprocity
n. கொண்டுகொடுப்புப் பாங்கு, செயல் எதிர்ச்செயற்பான்மை, இருவர் அல்லது இரு பொருளிடைத் தம்முள் ஒத்தளாவிய பண்பு, பரஸ்பரம், சரி எதிரீட்டுமுறை, நாடுகளிடையே வாணிகத்துறையில் உரிமை பரிமாற்றம்.
recital
n. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, வுவரக்குறிப்புகளை வரிசையாக எடுத்துரைத்தல், பட்டியல் வாசிப்பு, தொடர்ந்து ஓதுதல், உரத்த வாசிப்பு, நிகழ்ச்சியுரை, நிகழ்ச்சிகளை நிரல் படக் கூறுதல், செய்திகளைக் கூறும் ஆவணப்பகுதி, ஒரே இசைவாணர் நடத்தும் இசை யரங்குக்காட்சி.
recitation
n. ஒப்புவித்தல், ஒப்புவிப்பு, பாராயணம், காணாது ஒப்புவித்தல், மேடைச்சொற்பொழிவுக்கான உரைத்தொகுதி, பாராப்பாட ஒப்புவிப்பு, மனப்பாட ஒப்புவிப்புக் கேட்டல், மனப்பாட ஒப்புவிப்புப் பகுதி.
recitative,
n. கதைப்பாட்டுரை, இசைநாடகவுரை, கதைப்பாட்டுரைப்பகுதி, இசைநாடகவுரைப்பகுதி.
recite
v. நெட்டுருப்பண்ணி ஒப்புவி, மனப்பாடமாக ஓது, பாரயணஞ்செய், (சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு, நிரல்படச்சொல், வரிசைப்படுத்திக்கூறு,.
reciter
n. ஓதுவார், ஒப்புவிப்பவர், வரிசைப்படுத்திக்கூறுபவர், பாராயணச்சுவடி.
recitig
n. ஒப்புவிப்பு, (பெயரலடை) ஒப்புவிக்கிற.
recivilization
n. மீட்டும் நாகரிகப்படுத்துதல்.
recivilize
v. திரும்பவும் நாகரிகப்படுத்து.
reck
v. (செய்) அக்கறைகொள், கவலைப்படு, கவனஞ் செலுத்து, பொருட்படுத்து, பொருட்டாயிரு.
reckless
a. பொருட்படுத்தாத, அசட்டடையான, எண்ணாமல் துணிகிற, துணிச்சலான, துடுக்கான, இடரைப் பொருட்படுத்தாத, விளைவுப்பற்றிக் கவலைப்படாத.
recklessness
n. கவனமின்மை, முரட்டுத்தனம்.
reckon
v. எண்ணு, எண்ணிக்கையைக் கண்டறி, அளவைக் கண்டறி, மதிப்பிடு, கணி, கணக்கிடு, எண்ணிப்பார், கணக்கிட்டு மொத்தம் பெறு, கணக்கில் சேர்த்துக்கொள், வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள்., வகையில் ஒன்றாகக் கருது, என்றுகருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென கருது, என்று கருது, ஆய்ந்து முடிவுசெய், உறுதியென நம்பு, ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள், நம்பு, நம்பியிரு, சார்ந்திரு, ஆதாரமாகக்கொள்.