English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rebus
n. ஓவிய ஒலியெழுத்துப் புதிர்.
rebut
v. எதிர்த்துத் துரத்து, எதிர்த்துரை, தடுத்து நிறுத்து, கண்டனஞ் செய், தவறென்று மெய்ப்பி.
rebutment
n. எதிர்த்துத் துரத்துதல்., கண்டனம்.
rebuttal
n. எதிர்த்துரை, எதிரியின் சான்றெதிர்ச் சான்று.
rebutter
n. எதிர்த்துத் தள்ளுபவர், எதிர்த்தடிப்பது, எதிர்த்துரைப்பவர், எதிர்வாதி மறுப்பு.
recade
v. பின்செல், பின்னோக்கி நழுவு, பின்னோக்கிச் சரிவுறு, காட்சியிற் பின்னடைவுறு, பின்னே தொலைவாகச் சென்று விடு, பின்னடை, பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு, ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு, உள்வாங்கு, சுருங்கித் துணிவுறு, தணிவுறு, இயல்பில் குறைவுறு, மதிப்பிற் குறைபடு, உரிமை வகையில் கை நழுவமிடு.
recalcitrance
n. தனிமுரண்டு, இசைவுக்கேடு, இணக்கக்கட்டளை மீறுகை, கீழ்ப்படியாமை, எதிர்ப்பு மனப்பான்மை.
recalcitrant
n. முரண்டன், இசைவுக்கேடானவர், கீழ்ப்படிய மறுப்பவர், (பெயரடை) பிடிவாதமாய் எதிர்க்கிற, கீழ்ப்படியாத.
recalcitrate
v. ஒழுங்குமுறைகளை உதறித்தள்ளு, இணங்க மறு,. கீழ்ப்படியாமலிரு.
recalcitration
n. அருவருப்பான எதிர்ப்பு.
recalesce,
v. வெப்ப ஒளிர்வு மீதூரப்பெறு, வெண்சூடடைந் துருகும் இரும்பு வகையில் மீண்டும் வெப்ப ஒளிர்வுநிலைபெறு.
recalescence
n. (இய) வெப்ப ஒளிர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஒளிர்தல்.
recall
n. மீட்டழைப்பானை, வெளிநாட்டுத் தொலையமர்வு வகையில் திருப்பியழைப்பு, பணி மாற்ணை, தொலைப்பயணக் கப்பல்கள் வகையில் திரும்பாணை, குறியடையாளச் செய்தி மூலமான பயண மீட்பாணையிடு, தாயக மீட்புக் கட்டளையிடு, பணிவிடுத்து மீளும்படி கட்டளையிடு, நெறிதடுத்துத் திருப்பு, கருத்துத் திருப்பி ஈர்த்துக்கொள், மீட்டும் நினைவுக்குக்கொண்டுவா, நினைவுபடுத்திக்கொள், நினைவு கொள், நினைப்பூட்டு, தன் நினைவுகொள்வி, உயிர்ப்பி, நினைவு புதுப்பித்து ஊக்கு, முடிவு வகையில் மாற்று, கட்டளை வகையில் தள்ளுபடி செய், செயல் வகையில் மாற்றியமை,. கொடைப்பொருள் வகையில் திரும்பப் பெற்றுக்கொள்.
recallable
a. திரும்ப அழைத்துக் கொள்ளத்தக்க.
recant
v. சொன்ன சொல் மாற்று, முன்சொன்னது தஹ்றென்றே சமய முரணென்றோ கூறி அழ்னைக் கைவிடு, கொண்ட கருத்தை மாற்றிக் கூறு, முன் ஏய்வு மறுத்துரை.
recantation
n. மறுதலித்தல்.
recapitulate
v. தலைப்.புக்களை வரிசையாகப் படித்துக் கொண்டு போ, பொழிப்பாகக் கூறு,. திரும்பக்கூறு.
recapture
n. மீட்வு, திரும்பப் பெறுதல், மறுகவர்வு, இழந்த நிலம் மறுபடியும் கைப்பற்றுதல், மீட்ட பொருள், இழந்து கைப்பற்றியது, கருத்து மீட்டுப்பேறு, மறதியுட்பட்டதை மீட்டும் நினைவிற்குக் கொண்டுவருதல், (வினை) மீட்டு, மீட்டுப் பெறு,ர மறு பற்றீடு செய், மறுபடியும் கைப்பற்று, இழந்த நிலம் கைக்கொள், முயன்று மறபடியும் அடை, மறந்தது மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா.
recast
n. புத்துரு, உருச்செப்பம் மறுசீரொழுங்கு, (வினை) புது வடிவில் வார்டத்துருவாக்கு, வரிசை சீர்திருத்து.
receipt
n. பெறுகை, கைக்கொள்ளுகை, பெறுபொருள், பெறப்பட்ட பணம், பற்றுச்சீட்டு, பணம் பெற்றுக்கொண்ட தற்கான கையொப்பமுறி, பணம் பெறும் இடம், முறைப்பட்டி, சமையல் துறையில் வேண்டும் பொருள்களின் பட்டியலுடன் முறையும் கூறுஞ் சீட்டு, (வினை) பெற்றுக்கொண்டதாகக் குறி, பற்றுச்சீட்டுப் பதி.