English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rodomontade
n. வீம்புப் பேச்சு, வீறாப்புரை, (பெயரடை) வீம்பு பேசுகிற, பெருமையடித்துக்கொள்ளுகிற, (வினை) வீறாப்பு பேசு, பெருமையடித்துக்கொள், வீமபடித்துக்கொள்.
rodomontader
n. வீம்புரையாளர், வீறாப்புக்காரர்.
roe
-1 n. சிறுமான் வகை, செந்நிற மானின் பிணா, சிறு மான் குழு, சிறுமான்கள்.
roe-corn
n. மீன்சினை, மீனின் தனிமுட்டை.
roe-deer
n. சிறு மான்பிணை.
roe-stone
n. முட்டைக்கல், சுண்ணமணிக்கல்.
roebuck
n. இரலை, சிறு மான் கலை.
rogation
n. வேண்டுகோள், பிரார்த்தனை, (வர) பண்டை ரோமாபுரி அதிகாரிகள் மக்கள் முன் கொணருஞ் சட்டம்.
rogations
n. pl. முந்நாட் பாசுரங்கள், இயேசுநாதரின் வான் செலவு விழா நாளுக்கு முந்தியுள்ள மூன்று நாள்களில் பாராயணஞ் செய்யப்படும் வழிபாட்டுப் பாசுரங்கள்.
Roger
n. நாட்டுப்புற ஆடல்வகை, நாட்டுப்புற ஆடல் இசைவகை.
rogue
n. போக்கிரி, மோசக்காரன், கயவன், வஞ்சகன், நாற்றுகளில் பறித்தெறியத்தக்க பொலிவற்ற செடி, மந்தையில் முரட்டு விலங்கு, சண்டிப் பந்தயக்குதிரை, குறும்பு வேட்டைக்குதிரை.
roguery
n. போக்கிரித்தனம், குறும்பு, மோசடி.
roguish
a. போக்கிரித்தனமான, குறும்பு செய்கிற, கயமைக்குணமுள்ள, கொடிய.
roister
v. பேரிரைச்சலிட்டுக் கூத்தாடு.
roisterer
n. பெருங்கூச்சலிடுபவர்.
Roland
n. பிரஞ்சுப் பழங்கதைமரபில் ஆலிவர் என்பவனுடன் உத்தம நண்பனாகப் புகழப்படும் மன்னன் சார்லிமேனின் உல்ன்பிறந்தார் புதல்வன்.
rolerole
n. நடிகரின் பங்கு, தொழிற்கூறு, தனிமனிதர் கடமைக்கூறு, வாழ்க்கைப்பழி.
roll
-1 n. சுருள், துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம், சுருளோலை, சுருட்டப்பட்ட ஆவணம், பதிவேடு பெயர்ப்பட்டியல், பட்டியல், தொகுதி, திருகுசுருளப்பம், பொதியப்ப உருளை, சிறு அப்பப்பாளம், உருளை, திருகுவட்டு, நீளுருளை வடிவான பொருள், நீளுருளை வடிவான சிப்பம், வெண்ணெய்க்கட்டி, சவர்க்கார நீள்பாளம், வார்ப்பட உருளை, வார்ப்பட உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை, ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை, கழுத்துப்பட்டை, முதலிய வற்றின் புறமடி வளவு, (க-க) சுருட்போதிகை.