English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
remover
n. அகற்றபவர், எடுத்துச்செல்வது, சாமான்களை ஒரு வீட்டிலிருந்து மறு வீட்டிற்குக் கொண்டுசெல்பவர்.
remunerate
v. உழைப்பூதியங்கொடு, பரிசளி, கைம்மாறாகு, உழைப்பு வகையில் ஈடுசெய், உழைப்பவர் வகையில் உழைப்பீடு ஒளி.
remuneration
n. கைம்மாறு, பரிசு, சன்மானம், ஊதியம்.
remunerative
a. ஆதாயமான, பயன்தருகிற.
renaissance
n. புத்துயிர்ப்பு, (வர) 14-16-ஆவது நுற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை-இலக்கிய மறுமலர்ச்சி, மறுமலர்ச்சிக்காலம், மறுமலர்ச்சி இயக்கக் கலை-சிற்பப்பாணி, (பெயரடை) மறுமலர்ச்சிக்காலஞ் சார்ந்த, மறுமலர்ச்சி இயக்கத்திற்குரிய.
renal
a. குண்டிக்காய்கள் சார்ந்த.
renascence
n. புத்துயிர்ப்பு, புதுப்பிப்பு, கலை-இலக்கிய மறுமலர்ச்சி இயக்கம்.
renascent
a. புத்துயிர் பெறுகிற, புதுவலிவு பெறுகிற.
rend
v. கிழி, திருகிப்பறி, இரண்டாகப் பிள, துண்டு துண்டாகப் பிரி.
render
n. குடிவாரம், பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம், (வினை) விட்டுக்கொடு, திருப்பிக்கொடு, ஈடாக அளி, சரிசெய், ஒப்புவி, ஒப்படை, பணிந்துகொடு, முன்வை, முன்னிலைப்படுத்து, வழங்கு, செய், ஆக்கு, ஆக்கியமை, காட்டு, உருப்படுத்திக்காட்டு, கலையுருப்படுத்திக்காட்டு, மொழிபெயர், சொற்பெயர், உருப்பெயர், மற்றயமை, கடனாற்று, ஆற்றியுதவு, ஆற்று, நடைமுறைப்படுத்து, உருக்கு, உருக்கிவடி, தௌிவாக வடித்தறு, கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
render-set
n. சாந்தின் இருபூச்சு, (பெயரடை) இருதடவை பூச்பட்டுள்ள, (வினை) இரண்டுமுறை சாந்து பூசு.
rendering
n. பாடபேத வடிவம், மொழிபெயர்ப்பு.
rendezvous
n. குறியிடம், வழக்கமாகக் கூடுமிடம், குறியிடச் சந்திப்பு, படைச்சந்திப்பிடம், கப்பல்கள் கூடுமிடம், குறியிடத்திற் கூடு.
rendition
n. மொழிபெயர்ப்பு, நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம், நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம், இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம், இசைப்பாடலின் பாடற்றிறம்.
renegade
n. கட்சிமாறி, கட்சியைக் காட்டிக் கொடுப்பவர், கொள்கை துற்ந்தவர், கட்சியை விட்டோடியவர், சமய மாறுபவர், (வினை) கொள்கை துற.
renege, renegue
சீட்டாத்தில் முதலில் இறக்கிய சீட்டு வகையிலேயே தொடர்ந்து ஆடத் தவறு.
renew
v. புதுக்கு, புதிதாக்கு, புத்தாக்கஞ் செய், புத்துயிரளி, புத்தூக்கங்கொடு, புதுப்பி, மீண்டும் ஆக்கு, மீண்டுந் தொடங்கு, மீண்டுஞ்செய், மறபடியும் ஆக்கு, புதுமுயற்சி செய், மாற்றிப் புதிடிது, ஆக்கு, பக்ஷ்ங்கூறுகள் மாற்றிப் புதுக்கூறுகள் பொருத்தியமை, புதிதுபோலாக்கு., மீண்டும் பழைய நிலைக்குக் கொணர், மீண்டும் நிரப்பு, புது வலுவூட்டு, தொடர்ந்து செய், தொடர்ந்து கூறு, இடையீட்டுக்குப்பின் மீண்டும் தொடர், மீட்டும் வலியுறுத்து, கால அவதிப்படாமற் புதுப்பி.
renewable
a. புதுப்பிக்கப்படத்தக்க.
renewal
n. புதுப்பிப்பு, புதிய தொடக்கம், புதுமுயற்சி, அவதி கடந்த நீட்டிப்பு.