English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
remigrate
v. புலம்பெயர்ந்து மீள்.
remigration
n. புலம்பெயர்ந்த மீள்வு.
remind
v. நினைப்பூட்டு, ஞாபகப்படுத்து.
reminder
n. நினைவூட்டு, நினைவூட்டுச்செய்தி, ஞாபகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது, நினைப்பூட்டுக் கடிதம்.
remindful,
நினைப்பூட்டுகிற, ஞாபகத்துக்குக் கொண்டு வருகிற.
reminiscence
n. நினைவுக்குக் கொண்டுவரும் முயற்சி, முன்நினைவு, முன்நினைவுத்தொடர்பு, தொடர்நினைவு, பழைய நினைவின் தொடர்பான செய்தி, பழைய எண்ணம் நினைவூட்டுஞ் செய்தி, முன்னைய செய்தியின் பண்பை நினைவூட்டும் பொருள்.
reminiscences
n. pl. முன்நினைவுச் செய்திகளின் இலக்கிய வடிவான திரட்டு.
reminiscent
a. பழைய நினைவுப்ள் பற்றிய.
remise.
n. தப்பா மறு குத்து, (சட்) உரிமை விட்டுக் கொடுப்பு,. (வினை) தப்பாது விட்டெறி, (சட்) உரிமையை மற்றொருவருக்கு ஒப்படைத்துவிடு, உடைமையை மற்றொருவருக்கு மாற்றிவிடு.
remiss
a. கடமையில் கவனமற்ற, விழப்பில்லாத, வழுவிய, விடுபட்ட.
remissible
a. பண வகையில் செலுத்தப்படத்தக்க, அனுப்பப்படத்தக்க, குறைக்கப்படத்தக்க, மன்னிக்கப்படத்தக்க.
remission
n. பாவமன்னிப்பு, கடன் குறைத்தல், தண்டனை குறைத்தல், தண்டனை தவிர்ப்பு, ஆற்றல் குறைப்பு, செயல் தவறுகை, படித்தரக் குறுக்கம், விளைவு குறைபடல்.
remissive
a. குறையச்செய்கிற, தணியச்செய்கிற, மன்னிக்கிற.
remit
v. மன்னித்தல் செய், பொறு, கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர், தண்டனைள வகையில் விதிக்காமலிரு, நிறைவேற்றாமலிரு, குறைந்துபோ, குறையச்செய், தளர்ந்து, இளக்கு, தணியச் செய், செய்யாமலிரு, தவிர், நின்றுபோ, தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு, வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு, முந்திய நிலைக்குப் போகச் செய், தள்ளிவை, தாமதப்படுத்து, பணம் அனுப்பு, தொதகை செலுத்து, அஞ்சல் மூலமாக அனுப்பு.
remittal
n. தண்டனைக்குறைப்பு, வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்கினை அனுப்புதல்.
remittance
n. பண அனுப்பீடு, அனுப்பிய தொகை, அனுப்பிய பொருள்.
remittance-man
n. தாயகத் தொலை ஆதரவுவாணர், வேற்று நாட்டில் குடியேறித் தாயகத்திலிருந்து அனுப்பப்படும் பணத்தைக் கொண்டு வாழ்பவர், வெளிநாடுகளிலிருப்பதற்குப் பணம் கொடுக்கப்பெறுவர்.
remittee
n. பணம் அனுப்பபெறுபவர்.
remittent
n. இடைத்தளர் சுரம், இடையிடையே தணிந்து வரும் காய்ச்சல் வகை, (பெயரடை) காய்ச்சல் வகையில் இடையிடையே தணிந்து வருகிற.
remitter
-2 n. வழக்குமாற்றீடு, மற்றொரு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வழக்கு அனுப்பப்படுதல், (சட்) வல்லுரிமை மாற்றீடு, உடைமையாளர் உடைமைக்குரிய இரு உரிமைகளில் உடைமையைத் தகவுடைய உரிமையடியாக மாற்றியமைத்தல்.