English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
remainder-man
n. விருப்ப ஆவணப் பின்விளைவுரிமையாளர்.
remaindership
n. விருப்ப ஆவணப் பின்விளைவு உரிமை நிலை.
reman
v. புதிய ஆள் அமர்த்தி இணை, மீட்டும் மனிதத் தன்மைக்குக் கொண்டுவா, மறுபடியும் வீரம் ஊட்டு.
remand
n. காவல் வைப்பு, (வினை) மறுபடியும் அனுப்பு, மறுபடியும் காவலின் ஒப்படை, புதிய சான்றுகள் திரட்டி விசாரணை செய்வதற்காக மீண்டும் காவலுக்கு அனுப்பு.
remanent
a. மீந்துள்ள, எஞ்சியுள்ள.
remanet
n. மீதியுள்ள பகுதி, எச்சம், தள்ளிவைக்கப்பெற்ற வழக்கு, ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றச் சட்ட மூலம்.
remarable
a. குறிப்பிடத்தக்க, கவனித்தற்குரிய, தனிச்சிற்பபிற்குரிய.
remargin
v. புதிய ஓரங்கட்டு.
remark
n. குறிப்புரை, கருத்துக்குறிப்பு, குறிப்பீடு, எழுத்துவடிவக் குறிப்பு, எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு, குற்றங்குறை எடுத்துரைப்பு, கவனிப்பு, கருத்திற் கொள்ளுதல், கூற்று, குறிப்புவாசகம்,(வினை) கருத்திற்கொள், குறிப்பிடு, கவனித்துப்பார்., கருத்துரை கூறு, கருத்து எடுத்துரை, குணங் குற்றங்கள் எடுத்துரை, கருத்து விளக்கங்கூறு.
remarque
n. அடையாளம், செதுக்கோவியத் தட்டின் பழைமை குறிக்க ஓரத்தில் எழுதப்பெறும் ஓவியக் குறிப்பு.
remblai
n. கோட்டை கொத்தளப் பிடிசுவர்கள் முதலிய அமைக்கப் பயன்படும் மண், இருப்புப்பாதை, மேடுகளை அமைக்கப் பயன்படும் மண், சுரங்கத்தில் ஒதுக்கிச் சேமிக்கப்பட்ட மண்.
Rembrandtesque
n. ரெம்பரான்டு (1606-6ஹீ) என்னும் டச்சு ஓவியர் கையாண்ட பண்பு, முனைப்பான ஒளிநிழல் வண்ண ஓவியப் பாணி, (பெயரடை) ரெம்ப்ரான்டு பாணியிலுள்ள.
remediable
a. சீர்ப்படுத்தக்கூடிய, தீர்வுகாணத்தக்க, பரிகரிக்கத்தக்க.
remedial
a. இழப்பீடு செய்யவல்ல, பரிகார நோக்கங் கொண்ட.
remediless
a. தீர்வற்ற, பரிகாரமில்லாத, குணப்படுத்த முடியாத.
remedy
n. தீர்வு, பரிகாரம், நோய்தீர்க்கும் மருந்து, நோய் நீக்க வகை, ஈடுசெய்தல், சட்டவாயிலான இழப்பீடு, நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க மாறுபாட்டளவு, (வினை) குணப்படுத்து, திருத்து, சீர்ப்படுத்து, பரிகரி, ஈடுசெய்.
remember
v. நினைவில் வைத்துக்கொள், மறவாதிரு, உள்ளு, ஞாபகப்படுத்திக்கொள், மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு, பரிசுகொடு, சிறு கைக்கூலிகொடு, கொடுத்துச் சரிபண்ணு, வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு, ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
remembrance
n. நினைவில் வைத்திருத்தல், நினைவில் வைத்திருக்கப்பெறல், நினைவு, நினைவூட்டிக்கொள்ளுதல், நினைவூட்டுப்பொருள், நினைவுமலர், நினைவுச்சின்னம், நினைவாற்றல் எல்லை.
remembrancer
n. நினைப்பூட்டுபவர், நினைப்பூட்டுவது, நினைவுக்குறிப்பு, நினைவுச்சின்னம், மன்னர் கருவூல அலுவலர்.
remembrances
n. pl. கேட்புச் செய்திகள், வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.