English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
relativity
n. சார்பியல் கோட்பாடு, அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தன்றித் தனிரநிலை இயல்புகள் உடையன அல்ல என்னும் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கொள்கை.
relator
n. (சட்) வழக்கு விவரக்கூற்றாளர், சட்டத்தலைமை ஆட்பேரிடம் வழக்கு விவரக் கூற்றளிப்பவர்.
relax
v. தொங்கலாக்கு, தளர்த்து, தசைநரம்புகளைத் தளர விடு, தசைநரம்புகள் வகையில் தளர்வுறு, தொங்கலாக்கு, வலிவிழக்கச்செய், நலியச்செய், நலிவுறு, தொங்கலாகு, ஊக்கங் குன்றச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், தணி, குறையச்செய், தணிவுறு, முறுக்கு அவிழச்செய், சுறுசுறுப்புக் குறையச்செய், ஆஹ்ல் தணியச்செய், கண்டிப்புத் தளர்த்து, ஊக்கங் குறைவுறு, முறுக்கு அவிழ்வுறு, சுறுசுறுப்புத்துறை, கண்டிப்புத்தளர்வுறு.
relaxation
n. தண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு.
relay
-1 n. இடைமாற்றீடு, இடைமாற்றாளர் குழுமம், பணி மாற்றுப்படை, மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி, இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி, இடைமாற்றிடம், படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம், படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை, ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம், மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு, தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை, (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய், இடைமாற்றுப்படிகள் அமை, இடை மாற்றீட்டு ஏற்பாடு செய், இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி, வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
relay-race
n. இடைமாற்று ஓட்டப்பந்தயம், அஞ்சல் ஓட்டப்பந்தயம்.
release
n. விடுவிப்பு, விடுபாடு, கட்டுப்பாட்டுநீக்கம், தவிர்ப்பு, விட்டொழிப்பு, உய்தி, துன்பநீக்கம், இடர் நீக்கம், விடுதலை, கடமைக்கட்டவிழ்ப்பு, கடன்களையறவு, துயர்ஒழிப்பு, வாழ்க்கைவிடுபாடு,. கடன்விடுவிப்புப்பத்திரம், உரிமைமாற்று, உடைமைமாற்று, இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைமாற்றுப்பத்திரம், இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைத் துறப்பு, வெளியீடு, குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு, வெளியீட்டுப்பொரள், வெயீட்டுமுறை, (வினை) விடுவி, கட்டவிழ், தளையறு, அடிமை நீக்கி உரிமையளி,. கிடைக்கும்படி செய், வெளியிடு, திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொணர், (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி, உரிமைவிட்டுக்கொடு, உடைமை கைதுற, உடைமைமாற்றிக் கொடு.
relegate
v. குறிப்பிட்ட இடத்திற்கு நாடுகடத்து, கீழ்நிலைக்கு ஒதுக்கு, இழிந்த இடத்திற்கு அனுப்பு, செய்திமீது முடிவெடுக்கவோ செயற்படுத்தவோ பிறரிடம் ஒப்படை, செயதி அறிய ஒருவரை உசாவு, தகவல் பெறும்படி அனுப்பு.
relent
v. கடுமை தணிவுறு, கண்டிப்பைத் தளர்த்திக்கொள், மனம் இரங்கு, கனிந்திரங்கு, கருணை காட்ட இசைவுகொள், செய்தற்கிரங்கு.
relentless
a. கடுமை தணியாத, இரக்கம் அற்ற.
relevancy
n. பொருத்தம், இயைபு.
relevant
a. தொடர்புடைய, இயைபுடைய பொருத்தமான.
reliability
n. நம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை.
reliable
a. நம்பத்தக்க, மாறா ஒப்பியைபு நிலையுடைய, ஒருபடித்தான, நல்லொழுக்கம் வாய்ந்த, நற்பண்பு உடைய.
reliance
n. பொறுப்புறுதி, நம்பிக்கை, நம்பிக்கைக்குரிய நிலை, நம்பிக்கைக்குரியது, நம்பிக்கைக்கு ஆதாரமானது.
relic
n. திருச்சின்னம், பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள், நினைவுச்சின்னம், எச்சமிச்சக் கூறு, வரலாற்றுச் சின்னம், சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள்.
relicss
n. pl. பிணம், இறந்தோர் எச்சமிச்சக் கூறுகள், அழிவுசக்குத் தப்பி மீந்த துண்டுத் துணுக்குகள்.
relict
n. தப்பிப் பிழைத்திருப்பவர், விதவை, (பெயரடை) தப்பிப் பிழைத்திருக்கிற, (மண்) சூழ்பொருள்கள் அகன்று தனித்து மீந்துள்ள.
relief
-1 n. சுமைத் துணிவு, நோவு தணிவு, துஸ்ர்த்தீர்ப்பு, கவலை தணிப்பு உபாசாந்தி, இடர்காப்புத, இன்னல் தவிர்ப்புதவி, ஏழ்மைத்துயர் தணிப்புதவி, துணை உதவி, துணைவலியுதவி, ஆள்மாற்றுதவி, இடைமாற்று சோர்வுணர்ச்சி அகற்றும் இடைவேறுபாடு, இடைமாற்றுக்கூறு, இடைத்தளர்வுக்கூறு.
relieve
v. நோவுதணி, துன்பந் துடை, துணையுதவி அளி, துணைப்படை, அனுப்பி உதவு, முற்றுகை தப்ர், பணியில் ஆள் மாற்றி உதவு, சோர்வகற்றும் இடைமாற்றாக உதவு, கலையில் இடைவேறுபாடு காட்டு, செறிவகற்றும் இடைத்தளர்வூட்டு, விடுபாடு செய், பொறுப்பிலிருந்து விடுவி, முனைப்பளி, கெட்டிமைத்தோற்றங் கொடு.