English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
refill
-1 n. மறு நிரப்பீடு, மறு நிரப்பீட்டுச் சேமத்தங்கற் பொருள், வெடிமருந்தின் மறுசெறிவு, வெடிமருந்தின் மறு அடைப்பளவு.
refine
v. மாசகற்று, துப்புரவு செய், தௌிவாக்கு, அழகியதாக்கு, நேரிதாக்கு, பண்பு மேம்படுத்து, நாகரிகமுடையதாக்கு, சுவைநுட்பமூட்டு, ஒழுகலாறுகளைப் பண்படுத்து, புறத்தோற்றத்துக்கு மெருகிடு, தூய்மையாகு, தௌிவுபடு, நாகரிக நடத்தைவளரப்பெற, மென்மைநயம் மிகுதியாகப் பெறு, மொழிவகையிற் செப்பஞ் செய், கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு, நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து, நுட்பமான வேறுபாடுகள் செய், மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
refined
a. துப்புரவாக்கப்பட்ட, செப்பஞ் செய்யப்பட்ட, பண்பட்ட.
refinedly
adv. நயநாகரிகமாக, வனப்புடையரென்று நிலை மேற்கொண்டு.
refinement
n. தூய்மைப்பாடு, துப்புரவாக்கப்பட்டட நிலை, கருத்து நுட்பம், சுவை நேர்த்தி, மெருகேறிய ஒழுகலாறு, நுண்ணிய திறங்காட்டும் நிலை, திறமைமிக்க வேலைப்பாடு, நுணுக்க விரிவாக வகுத்தமைக்கப்பட்ட வேலைப்பாடு, நுட்பமான ஆய்வாராய்வுப்பண்பு, நுண்ணய வேறுபாட்டுத் திறம்.
refiner
n. செம்மைப்படுத்துவபவர், தூய்மையாக்குபவர், வாக்குபவர், சர்க்கரை-உலோகம் முதலிய வற்றைத் தூய்மைப்படுத்தும் தொழில் மேற்கொண்டவர்.
refit
n. செப்பநிலைச் சீர்திருத்தம், (வினை) கப்பலை மீண்டும் நன்னிடலைப்படுத்தும் வகையில் சீர்திருத்து, கபப்ல் வகையில் மீட்டும் பயன்படும்படி சீர்திருத்தம் பெறு.
refitment
n. கப்பலின் செப்பநிலைத்திருத்தம்.
reflation
n. பொருளியல் மறுவீக்கம், நாணய மதிப்பின் மீட்டுயர்வு.
reflect
v. ஒளிக்கதிர்களை வாங்கி எறி, ஒளியை எதிரடித்துக் காட்டு, பளிங்கு வகையில் எதிர்நிழலிடு, நிழலுருப்படுத்திக் காட்டு, ஆழ்ந்து நினை, சிந்தனை செய், மீட்டும் நினைவுக்குக் கொண்டுவா, திரும்பவும் நினைத்துப்பார், பழைய நினைவுகளில் ஆழ், எதிர் விளைவாக வழங்கு, மேற்படிவி, விளைவி, வழங்கு, வசைக்கூறுபடிவி, வசைக்குறிப்பு, எழுப்பு.
reflected
a. எதிலொளியாக வீசப்பட்ட, ஒளிவகையில் எதிரடிக்கப்பட்ட, பிறரொருவரால் வழங்கப்பட்ட, பிறிதொன்றனிடமிருந்து பெறப்பட்ட.
reflecting
a. ஒளி எதிரடிக்கிற, ஒளிக்கதிர்களை வாங்கி எறிகிற, நிழலுருக் காட்டுகிற.
reflectingly
adv. ஆழ்ந்த நினைவுடன், கண்டிக்குட் குறிப்புடன், வசைக்குறிப்புத் தோன்றும்படியாக.
reflection
n. ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல், ஒளிவகையில் பட்டெறிதல், முட்டிமீளல், பட்டெறிவு, பட்டெறி வெப்பு, பட்டெறி வண்ணம், உருநிழலீடு, பிரதிபலிப்பு, உருநிழற்படிவு, உருநிழல், பிரதிபிம்பம், உள்மடி நரப்பியக்கம், விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம், கண்டனக் குறிப்புடன் இகழ்தல், ஏளனக்குறிப்பு, வசைக்குறிப்பு, அவப்பெயர் தேடித்தரல், புகழ்க்கறைப்படிவு, புகழ்க்கறை, உண்ணினைவாற்றல், தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல், கருத்து, நினைவு, சிந்தனை, சிந்தனை தரும் விளக்கம், சிந்தனை உரை, பொருள் பொதிந்த உரை, செறிமொழி.
reflector
n. கதிரெறிபரப்பு, கதிர்களை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு, உருநிழல் எறிதளம், தெறிமுப்ப்பு வில்லை, வேண்டிய திசையில் ஒளிவாங்கி மீளச் செய்வதற்குரிய உட்குழிவுடைய வில்லை, படிவுருக்காட்டும் அமைவு, உருக்காட்டமைவு தொலைநோக்கி, படிவமைவுச் சாதனம், பழக்க வழக்க மனக்கோட்டங்கள் உருப்படிவித்துக் காட்டும் அமைவு, படிவமைவாளர், உருப்படிவித்துக் காட்டுபவர்.
reflet
n. மட்பாண்டப் பளபளப்பு, மட்பாண்ட வண்ணவெட்டு.
reflex
-1 n. எதிர்நிழல், நிழலுரு, எதிர் உருப்படிவு, மறு படிவுரு, துணைப்படிவுத்தோற்றம், இணை எதிர்ப்படிவம், இணைதுணைவிளைவு, பல்ர் ஒளிவண்ணம், ஓவியவகையில் பட்டெறி ஒளிவண்ண இயல்பமைவு, பட்டெறி ஒளி, பட்டுத்தெறி ஒளி, பட்டுடுத்தெறி வண்ணம், சார்புவண்ணப் புகழ், புற உருத்தோற்றம், பண்புரு, இயல் நரப்பியக்கம், உடல் இயக்க வகையில் விருப்பாற்றலுக்கு உட்படாத தன்னியல் நிகழ்வு, (பெயரடை) தாக்கிமீண்ட, பின்னோக்கி மடங்கிய, ஒளிவகையில் பட்டெறிவான, எதிர்நிழலீடான, கருத்துவகையில் உண்மறிவான, சிந்தனைவகையில் தன்மீள்வான, உள்ளியக்க வகையில் தன்னெறிவான, விளைவுவகையில் செய்பவர்மீதே எதிர்மீள்வான, மூலத்தின்மீதே எதிர்த்துத்தாக்குகிற, உடல்சார்ந்த இயக்கவகையில் தன்னியல்வான, விருப்பாற்றலுக்குஉட்படாது புறத்தூண்டுதலடுத்துத் தானே இயஙுரகுகிற.
reflexed
a. (தாவ)பின்னோக்கித் திடீரென வளைந்த, கீழ்நோக்கித் திடுமெனத் திரும்பிய.
reflexible
a. முட்டிமீளும் இயல்புடைய.