English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reef-point
n. கப்பற் பாயில் இணைத்துள்ள சிறு கட்டுக் கயிறு.
reefer
-1 n. (கப்) பாய்மடி சுருக்குபவர், (கப்) முடிச்சு வகை இரட்டை முடிச்சு, திஐணிடிய இருமார்பு வரிச்சட்டை.
reefing-jacket
n. திஐணிய இருமார்புவரிச் சட்டை.
reek
n. ஆவி, புகை, புகையாவி, புழுக்கவாடை, வாடை வீச்சம், ஊசல் நாற்றம், புழுக்க ஆவி மண்டலம், (வினை) புகையாவி வெளியிடு, புழுக்க ஆவி வெளியிடு, புழுங்கு, விரும்பத்தகாத வாடை பரப்பு.
reekie
a. புகையாவி வெளியிடுகிற.
reeky
a. புகையாவி வெளியிடுகிற, புகையார்ந்த, புகை மண்டுகிற, புழுங்கி நாறுகிற.
reel
n. திருகுவட்டு, நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை, சுழல்வட்டு, தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு, சிட்டம், சுற்றிழையின் நீள அலகு, தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை, இயந்திரங்களில் சுழலும் பகுதி, ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை, கறக்கம், சுழன்று தள்ளாடும் நிலை, எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை, (வினை) திருகுவட்டில் சுற்று, வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு, கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ, தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு, கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு, தலைசுற்று, உள வகையில் மயக்கமடை, உறுதியின்றி நில், தள்ளாடு, பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு, தள்ளாடி நட, ஊசலாடி ஓடு, உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு, வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு, அசைந்தாடுவதாதகத் தோன்று, ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு.
reen
n. அகல்பெரும் பள்ளம்.
reeve
-1 n. (வர) முதன்மைக் குற்ற விசாரணை நடுவர், கானடாவில் கிராம நகர்க்குழுத் தலைவர்.
ref
n. (பே-வ) காற்பந்தாட்ட அறிவுரை நடுவர்.
reface
v. கட்டிடத்துக்குப் புது முகப்பளி.
refection
n. சிற்றுண்டி, உணவாகவோ பானமாகவோ உஞ்ள்ள சிற்றுண், சிற்றுணா, இலோசான உணவு.
refectory
n. துறவிமட உணவுக்கூடம்.
refer
v. குறிப்பிடு, சுட்டு, குறித்துப்பேசு, எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு, பற்றியதாயிரு, தொடர்புடையதாயிரு, உரியதாக்கு, உரியதாகச் சுட்டு, குறித்தொதுக்கு, தொடர்புடையதாகக் கருது, தொடர்புடையதாக இணைக்கக் கருது, தொடர்புபடுத்து, பொருட்படுத்து, உரிய விளைவாகச் சுட்டு, காரண காரியத் தொடர்புடையதாகக் கருது, மூலமாகக் குறிப்பிடு, கலந்தாராய், கலந்தாய்வுத் தொடர்பு கொள், நாடி ஆய்வுரை கோரு, தகவல் நாடிச்சென்று கேள், நாடி அணுகு, வேண்டு, கோரிக்கைவிடு, சென்று உதவி கோரு, ஆற்றுப்படுத்து, தகவல்பெற அனுப்பு, பார்க்கும்படி ஏவு, மேவுவி, ஆய்வுரைக்காக அனுப்பு, மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு, தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு, ஆதாரமாகக்காட்டு, பிணை வகையில் சுட்டிக்காட்டு, பிணைபெற அனுப்பு, ஒப்புவி, ஒப்படை.
referable
a. மூலமாகக் குறிப்பிடத்தக்க, குறித்துக் கலந்தாய்வதற்குதரிய, கலந்தாய்வுக்கு அனுப்பப்படத்தக்க, கலந்தாய்வுக்கு அணுகத்தக்க, ஒதுக்கப்படத்தக்க.
referee
n. ஆட்ட நடுவர், ஆட்டக்காரணிகர், (வினை) நடுவராகச் செயலாற்று.
reference
n. தொடர்பு, உறவு, பொருத்தம், குறிப்பீடு, குறிப்புரை, சுட்டுரை, சுட்டுக்குறிப்பு, சுட்டுக்குறியீடு, புரட்டரவு, தேவை நோக்கீடு, தேட்டத் தேர்வு, தகவல் தேட்டம், குறிப்புத்தேட்டம், தகவல் குறிப்புக் கோரிக்கை, துணையாதாரம், மேற்கோள், சான்றாதாரம், பிணை ஏற்பாதரவு, சான்றாதரவு, பரிந்துரைப்பு, மேவுவிப்பு, தகவலுக்கான ஒப்புவிப்பு, முடிவுக்கான ஒப்படைப்பு, பணியாணை உரிமையெல்லை, (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
referendum
n. பொதுமக்கள் வாக்கெடுப்பு, தனி ஒரு செய்தியில் தேர்தலுக்குரிய மக்கள் தொகுதியினர் அனைவரும் வாக்கெடுப்பு மூலம் நேரடியாக முடிவு செய்யும் குடியொப்பமுறை.
referential
a. சுட்டு அல்லது மேற்கோள் அடங்கிய, வேறொன்றினைச் சுட்டுகிற அல்லது குறிப்பிடுகிற.
reffian
n. முரடன், கொடியஹ்ன், போக்கிரி, சட்டத்திற்கு முரணாகக் குழப்பம் விளைவிப்பவன்.