English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
reflexive
n. (இலக்) தன்மறிவியற்சொல், தன்மறிவியற் சொற்படிவம், தன்மறிவியல் மறுபெயர், தனிமறிவியற் பெயரடை, (பெயரடை) தன்மறிவான, செயல் செய்முதல்மீதே தாக்குவது குறித்த, எழுவாயினையே செயப்படுபொருளாக மீட்டுங் குறித்த, தற்சுட்டான.
refloat
v. கரைதட்டியகப்பலை மீட்டுங் கடலில் மிதக்கவிடு.
refluence
n. திரும்பிப் பாய்தல், கடலலையின் வேலையிறக்கம், குருதி மீட்சிப்பாய்வு.
refluent
a. திரும்பிப் பாய்கிற, கடலலை வேலை இறங்குகிற, குருதி திரும்பி உட்செல்கிற.
reflux
n. பின்னோக்கிய நீரோட்டம், பின்னொழுக்கு.
refoot
v. காலுறை அடிகப்பாகம் புதுப்பி.
reforest
v. மீட்டுங் காடாக்கு.
reforestation
n. மீட்டுங் காடாக மாற்றுதல்.
reform
-1 n. சீர்திருத்தம், நலமேம்பாடு, சீரமைவு, மாற்றியமைத்தல், சீர்ப்பாடு, அரசியற் குறைநீக்கம், ஊழல் நிக்கம், சீராக்கம், சமயத்துறையில் செயல்துறைக் கண்டிப்புமிகுந்த புதுக்கிளை, சீர்மை, சட்டமாமன்ற உறுப்பாண்மையை முன்னிலும் நேர்மைவாய்ந்த அடிப்படையில் சீரமைத்தல், (வினை) சீர்திருத்து, சீர்ப்படுத்து, சீர்திருந்து, சீர்ப்படு, மாற்றியமை, நீக்கு, ஊழலகற்று, திருத்தங்கள்செய், திருத்து, ஒழுக்கம் மேம்படுத்து, திருந்து, ஒழுக்க மேம்பாடுறு, தீங்குகளை அகற்றி ஒழி.
Reformation
-1 n. ரோமன் திருச்சபையிலிருந்த குறைபாடுகளை நீக்குவதற்காக 16-ஆம் நுற்றாண்டில் நடந்த கிறித்தவ சமயச் சீர்திருத்த இயக்கம்.
reformative
a. சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்து வகையே நோக்கமாகக் கொண்ட.
reformatroy
n. இளைஞர் சீர்திருத்தச்சாலை, இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப்பள்ளி, (பெயரடை) சீர்திருத்தும் பாங்குள்ள, சீர்ப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட.
reformed,
a. திருந்திய, சீர்திருத்தநெறி சார்ந்த.
reformer
n. சீர்திருத்தாளர், சீர்திருத்தவாதி, 16-ஆம் நுற்றாண்டில் நடந்த சமயச் சீர்திருத்த இயக்கதலைவர், 1க்ஷ்31-2ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச்சட்ட வரைவினை ஆதரித்தவர்.
refract
v. கோட்டமுறு, கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு, கதிர் சித்ர்வுறு, கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு, (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்.
refracting
a. ஒளிக்கதிர்க்கோட்டமுடைய, கதிர்ச்சிதர்வுடைய.
refraction
n. வக்கரிப்பு, கதிர்க்கோட்டம், கதிர்ச்சிதர்வு.
refractive
a. ஒளிக்கதிடிர் விலக்கஞ் செய்கிற, ஒளிக்கதிர்க் கோட்டஞ் சார்ந்த.
refractor
n. ஒளிக்கதிர்க்கோட்டம் உறுவிக்கும் பொருள், கதிர்க்கோட்டத் தொலைநோக்காடி.
refractory
n. உயர்வெப்பு ஏற்கும் பொருள், (பெயரடை) படிமானமறற், ஒத்திசைவற்ற, எதற்கும் மசியாத, வசப்படுத்தமுடியாத, முரண்டுபிடிக்கிற, கலாம் விளைக்கிற, பண்டுவத்துக்கு ஒத்துவராத, பொருள்கள் வகையில் உருக்கமுடியாத, வேலைப்பாட்டிற்கு உட்படுத்த முடியாத.