English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rubiginous
a. துரு நிறமுடைய.
rubious
a. கெம்புக்கல் நிறமான, செந்நிறமுடைய.
rubric
n. இயல் மேல்வரி, அத்தியாயத் தலைப்பு, கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி, தனிச்சிறப்புக் கூறு, செவ்வணள்ணக் குறிப்பு, கவர்ச்சிக் வறு, கட்டளை வரி, இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி, வீச்சுவரை, கையெழுததின் புற ஒப்பனைவரை, முடிவான செய்தி, (பெயரடை) செவ்வண்ணமான, செம்மைபடர்ந்த.
rubrician
n. செவ்வரி வல்லுநர், வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர், வரியேகி, கட்டளை வரிப்படி நடப்பவர்.
rubup
n. புது மெருகூட்டு, நினைவு புதுப்பிப்பு.
ruby
n. கெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு.
ruby-tial
n. பசுஞ் செந்நிறப் பின்புற மேல்பகுதியினையுடைய பசுநீலப் பொன் வண்டு வகை.
ruche
n. ஓரக் குஞ்சம், ஓரப் பின்னல்.
ruck
-1 n. பந்தயத்தில் பின்தங்கிப் போனவர்களின் தொகுதி.
ruck(2), ruckle
-1 n. சுரிப்பு, தோல் மடிப்புச்சுருக்கம், (வினை) சுரிப்பு விழச்செய்.
ruckle
-2 n. சாநிலையர் களகளப்பொலி.
rucksack
n. வெரிந் பை, பிரஸ்ணிகள் முதுகிற் சுமந்து செல்லும்பை.
rudbeckia
n. வடஅமெரிக்க தோட்ட மலர்ச்செடிவகை.
rudd
n. சிறு நன்னீர் மீன்வகை.
rudder
n. பயின், சுக்கான், கப்பலின் திசைதிருப்பு கட்டை, வழிகாட்டுந் தத்துவம், தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
rudderfish
n. கப்பலைப் பின்தொடரும் மீன்வகை.
ruddiness
n. சிவப்பு நிறம், குருதிநிறம்.
ruddle
n. காவி, செம்மறியாட்டுக்கு அடையாளமிடப்பயன்படும் சிவப்புக்காவி, (வினை) காவி யடி, சிவப்புக் காவியால் அடையாளமிடு.
ruddock
n. செம்மஞ்சள் நிற மார்வுடைய பாடும் பறவை வகை.
ruddy
a. செவ்வண்ணமான, செம்பவளநிறமான, ரோசா நிறமான,