English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
rowan
n. இறகுபோன்ற இலைகளையும் சிவப்புப் பழங்களையுமுடைய மரவகை, செந்நிறப் பேரிப்பழவகை.
rowdiness
n. போக்கிரித்தனம், முரட்டுக்குணம்.
rowdy
n. போக்கிரி, முரடன், பெருங்கூச்சலிடுபவன், (பெயரடை) போக்கிரித்தனமான, முரட்டுக்குணம் வாய்ந்த, பெருங்கூச்சலிடுகிற.
rowdy-dowdy
a. அமளி செய்கிற, பெருங்கூச்சலிடுகிற.
rowdyish
a. வீண் கலகஞ் செய்கிற.
rowdyism
n. போக்கிரித்தனமான நடத்தை.
rowel
n. தாற்றுச்சில்லு, குதி முள்ளின் முனையிலுள்ள பற்களமைந்த சுழலுஞ் சிறுவட்டு, நீரதுக்கு வட்டு, குதிரையின் உல்ம்பிலுள்ள நீர்க் கூற்றினை வெளிப்படுத்துவதற்குத் தோலுக்கும் தசைக்கும் இடையே செருகப்படும் மையத் துளையுடைய வட்டத் தோல் துண்டு, (வினை) தாற்றுச்சில்லினால் கிளறித்தூண்டு, குதிரை உடலில் நீரதுக்கு வட்டுச் செருகு.
rowlock
n. உகைமிண்டு, படகுத் துடுப்புக்கு உகைப்பாதாரமான அமைவு.
Roxburghe
n. புத்தகக் கட்டடப் பாணிவகை, பொன் எழுத்துடைய மூட்டுத்தோலும் வெட்டா அருகும் உடைய புத்தகக் கட்டடமுறை.
royal
n. (பே-வ) அரச குடும்பத்தினர், இரலை, அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான், முகட்டுக்கூம்பு, உச்சிப் பாய்மரம், முகட்டுப்பாய், பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய், (பெயரடை) அரசனுக்குரிய, அரசிக்குரிய, அரசுரிமை சார்ந்த, அரசு வழிவந்த, அரச குடும்பத்தைச் சேர்ந்த, அரசுப் பணியிலிருக்கிற, அரசர் ஆதரவு பெற்றுள்ள, அரசு முறையான, வீறார்ந்த, மாண்புடைய, பகட்டாரவாரமான, சிறந்த, உயர்ந்த, முதல்வதரமான, பேரளவினதான, இயல்வுமீறய அளவினமான.
royalism
n. முடியரசுக் கோட்பாட்டுப் பற்று.
royalist
n. முடியரசுக் கோட்பாட்டாளர், உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர், (பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த, அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
royalties
n. pl. அரச குடும்பத்தினர், அரசரின் தனிச்சிற்ப்புரிமைகள்.
royalty
n. அரசு, அரசபதவி, அரசுரிமை, அரசர் அதிகாரம், அரசி அதிகாரம், மன்னர் தனிச்சிறப்புரிமை, அரச குடும்பம், மன்னுரிமை, தனி மனிதருக்கு அல்லது நிறுவனங்களுக்கு மன்னர் வழங்கும் தனியுரிமை, கனிப்பொருள்கள் மீது வழங்கப்படும் மன்னுரிமை, நில உரிமைத்தொகை, சுரங்க வருவாய்கருதிக் குத்தகைக்காரர் நில உரிமையாளருக்கு வழங்கும் தொகை, புனைவுரிமைத்தொகை, புதுக்கண்டு பிடிப்பின் பயனீட்டாளர் கண்டுபிடிப்பாளருக்கு அளிக்குந் தொகை, விற்பனைப் பண விகிதம், ஏடு வகையில் ஆக்கியோர்க்கு அளிக்கப்டும் பங்குவீத உரிமை.
Royston crow
n. தலையுறையுடைய சாம்பல்நிறக் காக்கைவகை.
rub
-1 n. தேய்ப்பு, துடைப்பு, உராய்வு, முடப்பந்தாட்டத்தில் நில ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் தட்டுத்தடங்கல், தடை, சிக்கல், இடைத் தொல்லை, (வினை) தேய், துடை, உரசித்தேய், உராய்வுறு, உரசுநிரைலயுறு, உரசிக்கொள், உராய்வுறச் செய், துடைத்துத் துப்புறவாக்கு, துடைத்து ஈரம்புலர்த்து, துடைத்தகற்று., துடைத்தழி, தேய்த்துப் பளபளப்பாக்கு, துடைத்து மெருகிடு, தேய்த்து உருவரைப் படியெடு, தேய்த்தராவு, தேய்த்துப் புண்ணாக்கு, தேய்த்துக் கூராக்கு, தேய்த்துத் தோய்வி, தேய்த்தழுத்து, தேய்வுற்று நரை, தடவு, பூசு,. தேய்த்துப்புதுப்பி, தேய்த்து விறுவிறுப்பாக்கு. புதுத் தெம்பு அளி, முடப்பந்தாட்டப் பந்துவகையில் தட்டுத் தடங்கலுறு, தட்டுத்தடங்கலுடன் செல், தட்டுத்தடங்கல் கடந்துசெல்.
rub-a-dub
n. முரசொலி, (வினை) முரசொலியெழுப்பு.
rubato
n. (இசை) திரிபுக்காலச் சந்தம், உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி, (பெயரடை) (இசை) திரிபு காலமான, உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய.