English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pillarist
n. கந்து முனிவர்.
pillbox
n. மாத்திரைப்பேழை, ஒற்றைக்குதிரை வண்டி, (படை.) சிறு தற்காலிக நிலவறை அரண்.
pillion
n. (வர.) பிற்கலணை, குதிரைமீது இரண்டாவது சேணம், பின்னிருக்கை, மிதிப்பொறிவண்டியில் ஊர்பவருக்குப்பின் மற்றொருவருக்கான துணையிருக்கை.
pilliwinks
n. (வர.) விரல்நெருக்கி, விரல்களை நசுக்கிச் சித்திரவதை செயவதற்கான கருவி.
pillory
n. தண்டனைக்கட்டை, குற்றவாளியை ஒறுப்பதற்கான அரிகண்டம் போன்ற மரப்பணிச்சட்டம், (வினை.) ஒறுப்பதற்கான மரப்பணிச்சட்டத்தில் மாட்டு, பழிப்புக்கு ஆளாக்கு.
pillow
n. தலையணை, தலையணைக்கட்டை, துன்னல்திணடு, முட்டுக்கொடுப்பதற்கான, திண்டுக்கட்டை, (வினை.) தலையணை மேற் சாய்ந்துகொள், தலைசாய்ந்து இளைப்பாறு.
pillow-case
n. தலையணை உறை
pillow-fight
n. திண்டெறி விளையாட்டு, ஒருவர்மீதொருவர் தலையணைகள் வீசியடித்துக்கொள்ளும் விளையாட்டு.
pillow-slip
n. தலையணை உறை.
pillowy
a. தலையணை போன்ற, உருண்டு பெருத்த, மெதுவான.
pills
n. மேடைக் கோற்பந்தாட்டம்.
pillule
n. மாத்திரை, சிறு குளிகை.
Pilmsoll line, Plimsolls mark
n. கப்பற் சரக்குப் பளுவளவுக் கோடு.
pilose
a. மயிர் அடர்ந்த, மயிர்போர்த்த.
pilot
n. வலவர், இயக்குவோர், கப்பல் வலவர், துறைமுகக் கப்பற்பொறுப்பாளர், விமானம் இயக்குபவர், வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர், வழிகாட்டி, வேட்டைக்களத்தில் நெறிகாட்டி, (வினை.) வழிகாட்டி இட்டுச்செல், ஆற்றுப்படுத்து, நெறிகாட்டியாகச் செயலாற்ற, விமான வலவனாகச் செயலாற்று.
pilot-cloth
n. மேலங்கிகளுக்கான கனத்த முரட்டுத்துணி வகை.
pilot-engine
n. முன்செல்லும் பொறியம்.
pilot-fish
n. சுறாவுக்கு வழிகாட்டுவதாகச் சொல்லப்படும் சிறுமீன் வகை.
pilot-flag
n. மாலுமி வேண்டுமென்னும் அறிகுறிக்கொடி.
pilot-jacket
n. முரட்டுக் கம்பளித்துணியினாலான மாலுமியின் குறுகிய மேற்சட்டை.