English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pin-up
n. பற்றார்வப்படம், சுவரில் மாட்டி அழகுபார்க்கப்படும் பற்றார்வத்துக்குரியவரின் படம், (பெ.) சுவரிற் படமான மாட்டி அழகுபார்க்கப் படுவதற்குரிய.
pin-wheel
n. கடிகாரமணியடிக்கும் நெம்புகோலை உயர்த்தும் பற்களை விளிம்பிற் கொண்ட சிறுசக்கரம், தாள் காற்றாடி, சுழலும் சக்கரவாணம்.
pinafore
n. குழந்தை வேனுடுப்பு.
pinaster
n. தேவதாரு இன மரவகை.
pincenez
n. வில்படுப்புமூக்குக் கண்ணாடி.
pincers
n.pl. குறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
pincette
n. சிறுகுறடு, சாமணம்.
pinch
n. கிள்ளுதல், நெருடுதல், நுள்ளல், கடிப்பு, நெரிப்பு, வேதனை, சிட்டிகையளவு, நெருக்கடி வேளை, அவசர நொடிக்கட்டம், (வினை.) கிள்ளு, நுள்ளு, நெருடு, நசுக்கு, வருத்து, கடிப்புறுத்து, நோவுறுத்து, நோவால் நௌியப்பண்ணு, கொல்முனைமுறி, தொல்லையளி, பணம் பிடுங்கு, சுரண்டு, கைக்கடிப்பாயிரு, பிசுணித்தனஞ் செய், கருமித்தனம் பண்ணு, கஞ்சத்தனங் காட்டு, தாற்றுக்கோலால் ஊக்கு, காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
pinchbeck
n. போலித்தங்கம், செம்பு-துத்தநாகக் கலவைவகை, (பெ.) போலியான.
pincushion
n. குண்டூசிச் செருகாணை.
Pindari
n. கொள்ளைக்கூட்டத்தினர்.
Pindaric
a. பிண்டார் என்ற பண்டைக் கிரேக்க கவிஞனுக்குரிய.
Pindarics
n.pl. பிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை, பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை.
pine
-1 n. தேவதாரு, பசுமைமாறா ஊசியிலை மரவகை.
pine-beauty
n. முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை.
pine-cone
n. தேவதாருவின் திரளை.
pineal
a. (உள்.) தேவதாருவின் காயுருவுடைய.
pineapple
n. அன்னாசிப்பழம்.
pinery
n. அன்னாசிப்பழத்தோட்டம், தேவதாரு மரச்சோலை.
pinfold
n. அடைகொட்டில், (வினை.)பட்டியில் அடை.