English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pinole
n. சோளமாக் கலவை, சோளமாத் தின்பண்ட வகை.
pinprick
n. நச்சரிப்பு, சிறுதொல்லை.
pins
n.pl. (பே-வ) கால்கள்.
pint
n. நீர் முகத்தலளவைச் சிற்றலகு, அரைக்கால் காலன், (மரு.) 20 நீர்ம அவுன்சு.
pintado, pintado bird, pintado petrel
n. கடற் பறவை வகை, கினிக்கோழி.
pintail
n. கூர்முனை வாலுடைய வாத்துவகை, கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை.
pintle
n. சுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை.
pinxerunt
v. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்' என்னுங் குறிப்பு.
pinxit
v. ஓவியக்குறிப்புவகையில் 'இது தீட்டினார்'.
piny
a. தேவதாரு மரத்தினுடைய, தேவதாரு மரம் போன்ற, தேவதாரு மர இயல்புடைய, தேவதாரு மரங்கள் நிறைந்த.
piolet
n. பனிபிளக்குங் கோடரி.
pioneer
n. வழிகாண்மார், படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர், வழிமுனைவர், முன்னோடி, முதன் முயற்சியாளர், புதுவழிகாண்போர், புதுப்புலங்காண்போர், (வினை.) முன்னோடியாயமை, முன்சென்றுபாதை செப்பனிடு, முன்முயற்சிசெய், புதுவழி கண்டுதவு, புதுவழி திறப்பதில் ஈடுபடு, புதுப் புலங்காண்பதில் முனை.
piou-piou
n. மெய்ம்மாதிரியான பிரஞ்சுக் காலாட் படைவீரர்.
pious
a. கடமை பேணுகிற, சமயப்பணியார்வமுடைய.
pip
-1 n. தொண்டைகட்டி நாவில் வெண்மைபடரும் இயல்புள்ள கோழி-பருந்துகளின் நோய்வகை.
pipe
n. குழாய், குழல், வேய்ங்குழல், இசை மேளத்தின் தனிக்குழல், மிடற்றிசைக்குரல், புள் இசைப்பொலி, பறவைப்பாட்டு, படகோட்டியின் சீழ்க்கை, சீழ்க்கையடிப்பு, உடலில் குழல் வடிவ உறுப்பு, புகைபிடிக்குங் குக்ஷ்ய், சுரங்கக் கனிவள வேர், காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி, (வினை), குழலுது, வேய்ங்குழல் வாசி, குழலிற் பாடு, குழலிசைத்து வருவி, சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை, சீழ்க்கையடி, கீச்சுக் குரலிடு, குழாய்கள் இணைத்தமை, ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய், அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய், மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
pipe-clay
n. புகை குடிகுக்ஷ்ய் செய்யப்பயன்படும் வெண்களிமண், ஆடை நேர்த்தியில் மிகுகவனம்.
pipe-fish
n. முகம் நீண்ட நீளுருவ மீன்வகை.
pipe-line
n. குழாய் இணைப்பு வரிசை, எண்ணெய்க்குழாய் வழி, உற்பத்தியாளரிடமிருந்து சிறு வாணிகர்க்கு அல்லது வாங்குவோர்க்குப் பொருள் இடையீடின்றிச் செல்லுதல்.