English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pilchard
n. சிறு கடல்மீன் வகை.
pilcorn
n. உமி தானியமணியோடு, ஒட்டிக்கொண்டிராத கூலவகை.
pile
-1 n. முளை, கூர்ங்கழி, குத்துங்கழி, ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால், கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால், பண்டை ரோமரின் வேல், அம்பு முளை, (கட்.) தலைகீழ்க்கூம்பு, (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு, முளையிறக்கு, கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு.
pile-driver
n. கட்டிட அடிப்படை தாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்குவதற்கான இயந்திரம்.
pilewort
n. மஞ்சள் நிற மலர்ச் செடிவகை.
pilfer
v. சிறு களவு செய், அற்பப்பொருள்களைத் திருடு.
pilferage
n. சிறு திருட்டு,
pilgarlic
n. வழுக்கைத் தலை, வழுக்கைத் தலையர், பேதை.
pilgrim
n. தலந் திரிதருபவர், யாத்திரிகர், வாழ்க்கைப்பயணஞ் செய்பவர், (வினை.) யாத்திரிகர் போல் அலை.
pilgrimage
n. யாத்திரை, வாழ்க்கைப் பயணம், (வினை.) யாத்திரை செல்.
pilgrimize
v. யாத்திரை செய், தல யாத்திரிகராகச் செயலாற்று.
piliferous
a. (தாவ.) மென்மயிருள்ள, துய்யுடைய.
pill
n. மாத்திரை, குளிகை, ஒப்புக்கொள்ள வேண்டியதொன்று, மென்று விழுங்கவேண்டிய செய்தி, தொல்லைப்படுத்தும் ஆள், பந்து வரிப்பந்தாட்டப் பந்து, பீரங்கிக்குண்டு, (வினை.) மாத்திரைகளை மிகுதியாக உட்கொள்ளச்செய்.
pillage
n. கொள்ளை, போர்க்கலத்திற் கொள்ளையிடல், சூறை, (வினை.) பாழாக்கு, தாக்கிக் கொள்ளையடி.
pillar
n. தூண், அழகுத்தம்பம், தூபி, ஆதாரக்கால், திருநிலைக்கால், வணங்கப்படுஞ் சிலைக்கம்பம், நெடும்பாறை, சுரங்கத்தின் மேல் தன் ஆதாரமாக அகழாது விடப்பட்ட ஒடுங்கிய பாறை அல்லது நிலக்கரிப்பகுதி, மிதிவண்டி இருக்கையின் ஆதாரம், கைக்கடிகாரத்தை அல்லது கடிகாரமுகப்பை நிலைநிறுத்தும் ஆதாரமுனை, காற்று-நீர் முதலியவற்றின் நீள் செங்குத்துப்பிழம்பு, முக்கிய ஆதரவாளர், (வினை.) தூண்களைக்கொண்டு தாங்கச்செய், தூணைப்போல் தாங்கு.
pillar-box
n. அஞ்சல் தூண்.