English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
peduncle
n. (தாவ.) பூங்கொத்தில் தலைப் பூக்காம்பு, தனிநுனிப் பூக்காம்பு, (வில.) காம்பு போன்ற உடற் பகுதிஅமைவு.
peduncular, peduculate, pedunculated
a. தனிக்காம்பு சார்ந்த, தலைக்காம்புக்குரிய.
peel
-1 n. (வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம்.
peeled
a. சூறையிடப்பட்ட, தோலுரிக்கப்பட்ட, மழுக்கையான.
peeler
-1 n. உரிப்பவர், கொள்ளையடிப்பவர், நிலவளங்கெடுக்குந்தாவரம், தோலுரிக்குங்கருவி, புறத்தோடகற்றும் அமைவு.
peeling
n. உரித்தல், உரிதோல், உரியல்.
Peelite
n. (வர.) கூலக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை அகற்றியபோது பிரிட்டனின் அமைச்சரான பீல் என்பாருக்கு ஆதரவளித்த கான்சர்வேட்டிவ் கட்சியுறுப்பினர்.
peen
n. சுத்தியல் தலைப்பின் மென்னுளி.
peep
-1 n. ஊடுநோக்கு, துணைவழிப் பார்வை, ஒளிவுக்காட்சி, மறை நோட்டம், முதல் தோற்றம், (வினை.) ஊடாக நோக்கு, துனைவழிகாண், உற்றுக்காண், மறைவாக நோட்டமிடு, மெல்லவந்து தோற்றமளி, அரைகுறையாக, வெளிப்படு, பண்புகள் வகையில் இயல்பாக வெளிப்படு.
peep-hole
n. பார்க்குந் துனை, ஒளி ஊடு செல்லவிடும் சிற்றிடைவெளி.
peep-through
a. ஊடாகக் காணும் வாய்ப்பு அளிக்கிற
peep-toe
n. கால்விரல் காட்டும்படி நுனி வெட்டப்பட்ட புதைமிதி.
peeper
n. மறைந்து பார்ப்பவர், உற்று நோக்குபவர்.
peeping
a. துனை வழி உந்து நோக்குகிற, மறைந்து காண்கிற.
peepshow
n. சிறு புழை வழிக் கண்காட்சி அமைவு.
peer
-1 n. படி ஒப்பானவர், சரியிணை, சரி ஒப்பானது, பிரிட்டனின் உயர்படிப் பெருமகனார், கோமக்கள் படியினர், மேன்மக்கள் அவை உறுப்பினர், உயர் பெருங்குடி மகன், (வினை.) ஒப்பாயிரு, சரியிணையாயிரு, உயர்படிப்பெருமகனாராக்கு.
peerage
n. பிரிட்டன் உயர்படிப் பெருமகனார் நிலை.