English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
peddle
v. சுற்றித் திரிந்து விற்பனை செய், சுற்றித்திரி, அற்ப காரியங்களில் முனைந்தீடுபடு, சில்லறையாகக் கொடு, சிறிது சிறிதாகக் கொடு.
pedestal
n. நிலைமேடை, சிலை அடிப்பீடம், தூண் அடிக்கட்டை, கால்புழை மேசையின் ஆதாரக்கல், இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம், இயங்கியல் நிலையடுக்கு, அடிப்படை, ஆதாரம், (வினை.) பீடத்தின் மீதமை, பீடத்தின் மீது ஆதாரமாக்கு.
Pedestal fan
தளிகை விசிறி (பீடம்), நிலைமேடை மின்விசிறி
pedestrian
n. கால் நடையர், நடப்பவர், நடைப்பயிற்சியாளர், (பெ.) கால்நடையாகச் செல்கிற, நடந்து செல்கிற, நடத்தலுக்குரிய, மந்தமான, உயிரூக்கமற்ற.
pedestrianism
n. நடைப்பயிற்சி, நடந்து செல்லும் பழக்கம்.
pedestrianize
v. நட, கால்நடை பயில்.
pedicular
a. பேன் போன்ற, பேன் சார்ந்த.
pediculate
a. காம்புடைய, துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த.
pedicure
n. கால்விரல் உகிர்க்காழ்ப்பு மருத்துவம், கால்விரல் உகிர்க் காழ்ப்பு மருத்துவர்,(வினை.) காழ்ப்பகற்றிக் கால் விரல் உதிர் மருத்துவஞ்செய்.
pedigree
n. குடிவழி, மரபுக் கால்வழி அட்டவணை, வம்சாவளி, விலங்கின் மரபுக் கால்வழி, மரபுக் கால்வழியுடையது.
pedigreed
a. குடிவழியுடைய.
pediment
n. (க-க) பண்டைக் கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் வரி முக்கோண முகப்பு முகடு, வில்முகப்பு முகடு.
pedimental
a. வரி முக்கோண முப்ப்பு முகட்டையுடைய, வரி முக்கோண முகட்டு முகப்பைப் போன்ற.
pedimented
a. வரி முக்கோண முப்ப்பு முகட்டினையுடைய.
pedlar
n. அம்பணர், தலைச்சுமை அங்காடியர், வம்பு உய்க்குநர்.
pedlary
n. சுமந்து விற்பவர் தொழில், அம்பணர் சரக்கு.
pedology
n. மண்வகை ஆய்வுநுல்.
pedometer
n. அடியீடுமானி, காலடி எண்ணிக்கையால் தொலையைக் கணித்துக் காட்டுங் கருவி.
pedrail
n. பளுவான வண்டிகள் கரடுமுரடான பாதையில் எளிதாகச் செல்லும்படி காலடிகள் போன்ற சுற்றுறுப்புக்களுடன் கூடிய சக்கர அமைவு, சக்கரக் காலடியுறுப்பமைவு, காலடி உறுப்பமைவுச் சக்கரமுடைய வண்டி.