English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pectin
n. பழப்பசைச் சத்து.
pectoral
n. மார்பணிக் கவசம், யூத உயர்குருவின் மார்பணிப்பட்டிகை,(பெ.) நெஞ்சுக்குரிய, மார்பு சார்ந்த, மார்பு நோய்க்குக் குவ்ம் அளிக்கிற, மார்பில் அணியப்படுகிற.
pectre
n. பேயுரு, ஆவித் தோற்றம், சாவின் முன்னிழல், அறிவுத்தடம், போரின் கோரக்காட்சி, பித்தர் வெறித் தோற்றம், எலும்பு, எலும்புந் தோலுமாக வற்றியுணங்கிய உருவம், அஞ்சுவரு தோற்றம், துணுக்குறும் அருவருப்புக் காட்சி.
peculate
v. பணங் கையாடு, கையாடல் செய்.
peculiar
n. தனியில்புக்கூறு, சிறப்பியல்பு, சிறப்புத்தனியுரிமை, வட்டார மேலாட்சியிலிருந்து விலக்குரிமைபெற்ற திருச்சபை, தனிச்சிறப்புமையுடைய திருக்ககோயில், (பெ.) சிறப்புரிமையான, தனியியல்பான, தனிப்பட்ட தன்மையுடைய, பொது நீங்கிய, தனி ஒருவர்க்கு மட்டுமேயுரிய, தனி ஒன்றனுக்கேயுரிய, தனிப்படக் குறிப்பிடத்தக்க, தனித் தன்மைப்பட்ட, வழக்கமற்ற, கண்டு கேட்டறியாத, புதிர் வாய்ந்த.
peculiarity
n. தனித்தன்மை, சிறப்பியல்பு, தனிப்பட்ட பண்புக்கூறு, சிறப்புப் பண்புக்கூறு, வழக்கம், மீறிய பண்பு.
peculiarly
adv. தனி நிலையில், தனி முறையில், எதிர்பாராவகையில், வழக்கம் மீறிய நிலையில், தனிப்பட்ட தன்மையில்.
pecuniary
a. பண வகையான, பொருள் வகை சார்ந்த, அபராதத் தண்டனையான.
pedagogics
n. ஆசிரியரியல்.
pedagogue
n. பள்ளியாசிரியர், ஆசிரியர், கண்டிப்புக் கணக்காயர்.
pedagoguism
n. போதனை முறை, போதனை, கற்பிக்கும் பாங்கு.
pedagogy
n. ஆசிரியரியல், போதனை முறை.
pedal
n. நெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு.
pedant
n. கல்விச் செருக்குடையவர், புத்தகப் படிப்பாளர், கோட்பாட்டு வெறியர், நுல் விதிமுறை வெறியர்.
pedantic
a. கல்விச் செருக்குடைய, விதிகண்டிப்பான, எங்கும் பள்ளியாசிரியராகவே நடந்து கொள்கிற, புலமைப்பாணி விடாத.
pedantize
v. கல்விச் செருக்குடன் நட, புலமைப்பாணியிற் செயலாற்று, புலமைப் பகட்டாளராக்கு.
pedantocracy
n. ஆசிரியபுரட்சி.
pedantry
n. பகட்டு நுலறிவு, புலமைக் கண்டிப்பு, பகட்டாரவாரச் சொற்றொடர், குருட்டுக் கோட்பாடு வெறி.
pedate
a. (வில.) காலடி உடைய, பாதம் போன்ற, (தாவ.) இலை வகையில் கால்விரல் அல்லது பறவை உகிர் போன்ற கூறுடைய.