English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
peevish
a. வெடுவெடுப்பான, சீறி விழுகிற, சிடுசிடுப்பு மிக்க.
peewit
n. கூட்டமாக வாழும் நீள்காலுடை நீர்ப்பறவை வகை.
peg
n. முளை, மாட்டற்கொம்பு, பற்றிறுக்கி, ஆப்புக்கட்டை, இணைகுழைச்சு, மாடகம், யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி, தடைக்கட்டை, கட்டுத்தறி, எல்லைக்குற்றி, குறிச்சந்து, ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை, சாக்குப்போக்குக் கருவி, குடிவகை, (வினை.) முளையறைந்து இறுக்கு, ஆப்புஅறை, ஆணியிறுக்கு, விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து, பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து, குறிமீது முளை இலக்குவை, முளைகொண்டு தாக்கு, முளையறை, ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு, சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி, ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்து,விடாமுயற்சியுல்ன் உழை.
peg-top
n. உலோக முனடைய பம்பரம்.
pegamoid
n. வண்டிக் கட்டுமானத்திற் பயன்படும் செயற்கைத்தோல்.
pegasus
n. கிரேக்க பழங்கதை மரபில் பறக்கும் திப்பிய குதிரை, கவிதையாற்றல்.
pegorative
n. இழிவுபடுத்துஞ்சொல், (பெ.) இழிவுபடுத்துகிற.
peignoir
n. மாதர் அணியுந் தளர்த்தி அங்கி.
peine forte et dure
n. கடும் வகைத் தண்டனை, கேள்விக்கு விடையளிக்க மறுக்கும் கொடுங்குற்றவாளி வகையில் அழுத்திக் கொல்லுந் தண்டம்.
pekan
n. வட அமெரிக்க கீரியின ஊனுணி விலங்குவகை.
peke
n. சீனக் குள்ளநாய் வகை.
pekin
n. பட்டுத் துணி வகை.
Pekinese
n. சீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர், குறுநாய்வகை, (பெ.) சீன தேசத்துப் பீகிங்கு நகரத்துக்குரிய.
Pekingman
n. பீகிங்கு அருகே 1ஹீ2ஹீல் கண்டெடுக்கப்பட்ட முன்னுழிக்காலப் புதைபடிவ மனித இனம்.
pekoe
n. கருநிற நறுமணத் தேயிலை வகை.
pelage
n. விலங்கின் கம்பளிமயிர், குறுமென் மயிர்.
pelagian
-2 n. கடல் வாழ்வன, (பெ.) கடல்வாழ் உயிரினம்பற்றிய.
pelagic
a. மாகடலுக்குரிய, கடற்பரப்பிற்குரிய, கடற்பரப்பில் வாழ்கிற, கடற்பரப்பில் நிகழுகிற, கடலின் நடுஆழத்துக்குரிய, கடல் நடு ஆழத்தில் வாழ்கிற, கடலின் ஆழத்தில்நிகழ்கிற, ஆழ்கடல் சூழலிற் படியவிடப்பட்ட.
pelargonium
n. பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்.
Pelasgic
a. கிரீஸ் நாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பண்டைய மக்களினஞ் சார்ந்த.