English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pelerine
n. மகளிரின் தோள் தொங்கலுடுப்பு.
pelican
n. குஞ்சுகளுக்குத் தன் குருதியையே ஊட்டி வளர்ப்பதாக முற்காலங்களில் கருதப்பட்ட உணவுச் சேமிப்புப்பையுடைய நீர்க்கோழி வகை.
pelisse
n. கணுக்கால்வரை நீண்டு தொங்கும் மகளிர் மேலங்கி, குதிரை வீரரரின் குறுமென்மயிர்ச் சட்டை, குழவி மனைப்புறச் சட்டை.
pell-mell
n. குழப்பம், கதம்பம், கைச்சண்டை, (பெ.) தாறுமாறான, குழப்பமான, (வினையடை.) குழப்பமமாக, ஒழுங்கின்றி, தாறுமாறாக,தலைகுப்புற.
pellagra
n. ஊட்டக் குறைவால் ஏற்பட்டு முடிவில் மூளைக்கோளாறில் கொண்டுவிடும் தோல் வெடிப்புடைய நோய்வகை.
pellet
n. குறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி.
pellicle
n. தோல், சவ்வு, மென்படலம்.
pellitory
n. தொட்ட இடத்தில் எரிச்சலுட்டுங் காரச்சுவைகொண்ட வேர்ச் செடிவகை, சிறிதே பச்சையான மலருடைய புதர்ச்செடிவகை.
pellucid
a. தௌ்ளத் தௌிந்த, ஒளி எளிதில் ஊடுருவிச் செல்கிற, மாசுமறவற்ற, உச்சரிப்பில் தௌிவான, அறிவுத்தௌிவுடைய, தலைகுப்புற.
Pelmanism
n. இருபதாம் நுற்றாண்டின் நினைவுப் பயிற்சி முறை.
pelmet
n. திரைச்சீலைக் கழிகளை மறைப்பதற்காகக் கதவுகள் அல்லது பலகணிகள் மேல் விடப்படுங் குறுகிய கரைத் தொங்கல்.
pelota
n. பந்தும் மட்டையுங் கொண்டு விளையாடப்படும் பாஸ்க் இனத்தவர் ஆட்டவகை.
pelt
-1 n. செம்மறிட்டின் அல்லது வெள்ளாட்டின் குட்டைக் கம்பளி மயிர் கொண்ட ல், பதப்படுத்தப்படாத கம்பளித் தோல், செம்மறியாட்டின் பதப்படுத்தாத பச்சைத்தோல்.
pelta
n. பண்டையக் கிரேக்கர்கள் - ரோமர்கள் ஆகியோரின் பளுவற்ற சிறு கேடயம், (தாவ.) கேடயம் போன்ற அமைப்பு.
pelvis
n. இடுப்பெலும்பு, இடுப்புக்கூடு, இடுப்புவளையம், குண்டிக்காயின் உட்குழிவு.
Pembroke, Pembroke table
n. சிறு மடக்கு மேசை.
pemmican
n. கொழுச் செறிவப்பம், இளகிய கொழுப்புடன் உலர் இறைச்சித்தூள் சேர்த்த அப்பம், மாட்டுக்கறிக் கொழுச்செறிவப்பம், இலக்கியச் செறிவு.
pemphigus
n. (மரு.) நீர்க்கொப்புளத் தோல்நோய்வகை.
pen
-1 n. தொழுவம், பட்டி, வேலியடைப்பு, சூழ்பட்டி, (வினை.) பட்டியில் அடை, தொழுவத்திற் கட்டு, கிடை மறி.