English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pendulum
n. ஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள்.
penelope
n. பத்தினி, யூலிசிஸ் மனைவி.
penelopise
v. செய்ததை அழித்துச் செய்.
peneplain
n. (மண்.) குறிஞ்சி மருதத்திரிபு.
penertrating
a. நுழைநோக்குடைய, துளைத்துச் செல்கிற, உண்ணோக்குடைய, மற்ற ஓசைகளையும் விஞ்சி எளிதாகக் கேட்கிற.
penetralia
n.pl. கட்டிட உள்ளகங்கள், கோயிற் கருவறைகள், உள்ளிட இரகசியங்கள்.
penetrate
v. ஊடுருவு, உட்புகு, ஊடுபரவு, துருவி நோக்கு, துருவிக் கண்டுணர், பண்புதோய்வி, மனம்-பொருள்-திட்டம்-உண்மை முதலியவற்றின் வகையில் நுணுகி உள்நோக்கு, நுட்பமாக ஆராய், வழி செய்து கொண்டு போ, நுழை.
penetration
n. உட்புகுவு, ஊடுறுவல்.
penguin
n. துடுப்பு போன்ற சிறகுகளால் நீரடியில் நீந்தவல்ல தென்பகுதிக் கடற்கோழி வகை, பறவா விமானம்.
penial
a. ஆண்குறி சார்ந்த.
penicillate
a. (இய.,தாவ.) சிறு கொத்துக்களையுடைய, சிறு திரள்களை உருவாக்குகிற, தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட.
penicillin
n. பெனிசிலின், பூஞ்சக்காளானில் முதலிற் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய்நுண்மங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யப் பயன்படும் மருந்து.
peninsula
n. தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம்.
peninsular
-1 n. தீவக்குறைவாணர், (பெ.) தீவக்குறை உருவான, ஒட்டரங்கஞ் சார்ந்த, பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த.
peninsulate
v. நிலத்தைத் தீவக்குறை ஆக்கு.
penitent
n. செய்ததற்கு இரங்குபவர், கழுவாய் மேற்கொள்ளுபவர், (பெ.) தவறுக்காக வருந்துகிற, உய்தி தேடுகிற, கழுவாய் வேண்டுகிற, நோன்பாற்றுகிற.
penitential
a. கழுவாய் சார்ந்த, நோன்பு முறைக்குரிய.
penitentiary
n. திருத்தியல் சிறை, கழுவாய்-தண்டைனைத் தளர்த்தீடு ஆகியவற்றின் மேலாட்சிககுரிய போப்பாண்டவரின் நீதிமன்றப் பணிமனை, சீர்திருத்தமுறும் மாதர் புகன்மனை,(பெ.) கழுவாய் சார்ந்த, சீர்திருத்தப் பணிசார்ந்த
penitents
n.pl. கூட்டு உட்கட்டுப்பாட்டுக்காக இணையும் ரோமன் கத்தோலிக்க துறுவமடக் குழுவினர் தொகுதி.