English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pavilion
n. கூடார மண்டபம், விதான மண்டபம், காட்சிமாடம், கட்டிடத்தின் ஒப்பனைப் புறத் தாழ்வாரம், பட்டையிட்ட மணிக்கல்லின் அடிப்பகுதி, மருத்துவக்கூடத் தனிப்பகுதி, கொம்பில் கட்டிய மணி, புறச்செவி, (வினை.) அணிமாடங்களுடன் அமை, வண்ணப் பந்தரிட்டுக் கவி, இட்டுப் பொதி.
pavonazzo
n. மயில்வண்ணக் குறியுடைய சலவைக்கல், (பெ.) சலவைக்கல் வகையில் மயில்வண்ணக் குறியுடைய.
pavonine
a. மயிலுக்குரிய, மயில்போன்ற.
paw
n. கூருகிர்க்காலடி, (பே-வ.) உள்ளங்கை, கை, கையெழுத்து, (வினை.) தாளால் அறை, குதிரை வகையில் நிலத்திலுதை, காலால் நிலத்தில் எற்று, (பே-வ.) திருந்தா நிலையிற்கையாளு, மோசமாகக் கையாடு.
pawl
n. இயந்திரப் பற்களைத் தடுக்கும் அடைதாழ், நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் தடுக்கும் அடைகோல், (வினை.) நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் அடைகோலிட்டுத் தடு.
pawn
-1 n. சதுரங்க ஆட்டத்திற் காலாட் காய்.
pawnbroker
n. அடைமான வட்டிக்கடைக்காரர்.
pawnbrokig
n. அடைமான வட்டித்தொழில்.
pawnee
n. அடைமானமாகப் பொருள் வைக்கப் பெற்றவர், பிணையம் ஏற்பவர்.
pawnshop
n. அடைமானக் கடை.
pax
n. குருமாரும் வழிபாட்டாளரும் வழிபாட்டின்போது திருமுத்தமிடும் சிலுவைக் குறியிட்ட கற்பாளம், போர் நிறுத்தம்ஸ் நட்பமைதிஸ்
pay
-1 n. உழைப்பூதியம், கூலி, சம்பளம், ஊதியம், (வினை.) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு, வரிப்பணம் கொடு, பணத்தை ஒப்படை, உழைப்புக்கு ஊதியம் அளி, உழைப்புக்கீடாக வழங்கு, பரிசு வழங்கு, கொடு, வழங்கு, அளி, விளைவித்துக்கொடு, விளைவி, ஆதாயம்அளி, ஏற்ற பலன் அளி.
pay-as-you-earn
a. வருமானவரித் துறையில் வருவாய் இடத்திலேயே பிடித்துக் கொள்ளப்படுகிற.
pay-bill
n. சம்பளப் பட்டியல்.
pay-day
n. சம்பள நாள், பங்குக்களச் செலாவணி நிலையத்திற் பங்கு முதல் மாற்றுக்குப் பணங் கொடுக்கப்படும் நாள்.
pay-list
n. சம்பளம் பெறுபவர் பட்டியல்.
payable
a. கொடுக்க வேண்டிய, கொடுக்கத்தக்க, சுரங்கவகையில் ஆதாயந் தரத்தக்க.
paying
a. வருவாய் அளிக்கிற, ஆதாயந் தருகிற, செலவுக்குப் பணங் கொடுக்கிற, கட்டணம் அளிக்கிற, வாடகை தருகிற.