English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
patriciate
n. உயர்குடி வகுப்பு, உயர்குடி மக்கள் தொகுதி, உயர்குடியாட்சி, உயர்குடிப்படிநிலை.
patricidal
a. தந்தைக் கொலை சார்ந்த, தந்தைக் கொலை செய்கிற.
patricide
n. தந்தைக் கொலை, தந்தையைக் கொன்றவர்.
patrimony
n. தந்தைவழிச் சொத்து, மூதாதையர் வழிமரபுச் செல்வம், திருக்கோயிலுக்கு விடப்பட்ட நிவந்தம்.
patriot
n. பிறந்த நாட்டார்வலர்.
patriotic
a. பிறந்த நாட்டுப் பற்றார்ந்த.
patriotism
n. நாட்டுப்பற்று, தேசாபிமானம்.
patristic
a. தொடக்க காலக் கிறித்தவ திருச்சபை முதுவர் ஏடுகள் சார்ந்த.
patrol
n. படைத்துறைச் சுற்றுக்காவல் உலா, ஊர்க்காவலர் சுற்றுக்காவல், ரோந்து, காவல்தண்டு, சுற்றுக்காவற்குழு, தண்டுகாவலர், நாள்முறை விமானச் சுற்றுலா, வேவுக்குழு, புலங்காண் குழு, (வினை.) சுற்றுக்காவல் புரி, தண்டு காவலராகச் செயலாற்று.
patron
n. புரவலர், காப்பாளர், சிறப்பு வாடிக்கையாளர், காப்புத் திருத்தகை, மரபாதரவுப் புனிதர், பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்,பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர், மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
patronage
n. புரவு, ஆதரவு, மானியம் வழங்கும் உரிமை, வாடிக்கையாதரவு.
patronal
a. காப்புத் திருத்தகை சார்ந்த, மரபாதரவுப் புனிதச் பெயராலான.
patroness
n. பெண் புரவலர்.
patronize
v. புரந்தருள், துணையாதரவு செய், ஊக்குதவிசெய், வள்ளலாக நடி, ஆதரவுப் பாவனை காட்டு, பெருமித ஆதரவுப்பாங்குடன் நட.
patronizing
a. ஆதரவுப் பாப்புக் காட்டுகிற, ஆதரவு பாலிக்கிற.
patronizingly
adv. ஆதரவுப் பசப்புடன், ஆதரவுப்பாவனைப் பாங்கில்.
patronymic
n. தந்தை வழிப் பெயர், மூதாதைவழிப் பெயர், (பெ.) தந்தை வழியான, மூதாதை வழிப்பட்ட.
patroon
n. (வர.) சிறப்புரிமை நிலக்கிழார், நியூயார்க்கு நியூ ஜெர்ஸி ஆகிய அமெரிக்க பகுதிகளில் 1க்ஷ்50க்கு முன்னிருந்த டச்சு அரசியலின் பட்டய உரிமைபெற்றுச் சிறப்புரிமை பெற்றிருந்த நிலக்கிழார், கப்பல் மீகான், படகு வலவர்.
patten
n. மேல் சோடு, சேற்றுக்காப்பு மீபுதையாணம், புதையரணம் சேற்றில் அமிழாதபடி இருப்பு வளையங்கள் மீது மரத்தாலான அடிக்கட்டையுடைய காப்புக்கவிதைப் புதையடி.
patter
-1 n. குழுஉமொழி, தொழிற்குழுவின் தனிக்குறி மொழி, ஆரவாரப் பேருரை, பாடலிடை விரை உரையாடல், பாடல்வாசகம், களிநாடக வாசகம், (வினை.) கடகடவென ஒப்பி, மளமளவென்று பேசு, உளமேவாமல் பேசு.