English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pattern-room
n. ஆடை-கம்பளம்-சுவர்த்தாள்களின் ஒப்பனை மாதிரிச் சட்டம் ஒருவாக்குந் தொழிற்சாலைப்பகுதி.
pattern-shop
n. ஆடை கம்பளம்-சுவர்த்தாள்களுக்கான ஒப்பனை மாதிரிப் படிவங்களின் சட்டங்களை உருவாக்கும் தொழிலகம்.
patty
n. மாப்பண்டம், பிட்டு.
pattypan
n. மாப்பண்டம் சுடுவதற்கான சில்லுத்தட்டு.
patulous
a. திறந்த, விரிந்த, கிளைகள் வகையில் பரந்தகன்று.
Pauline
n. லண்டன் மாநகர் தூய திரு,பால் கல்வி நிலைய உறுப்பினர், (பெ.) தூய திரு. பாலுக்குரிய.
paulo-post-future
n. கிரேக்க மொழியில் வினைச்சொல் எதிர்நிகழ்வின் விளைவு குறிக்குங் காலம், முடிவுநிலை எதிர்காலம்.
PaulPry
n. 'முந்திரிக்கொட்டை'.
paunch
n. தொப்பை, வயிறு, விலங்கின் முழ்ல் இரைப்பை, திண்ணிய பாய்விரிப்பு, (வினை.) குடலெடு, குடலை வெளிப்படுத்து.
pauper
n. ஏழையர், நொடித்தவர், இரவலர், இரப்பாளி, ஏழையர் விடுதியின் உதவி பெறுபவர், இயலா நிலை மனுச்செய்பவர்.
pauperess
n. இயலா எளிமையுடைய பெண், ஏழை விடுதி உதவி பெறும் பெண், இரந்துண்பவள்.
pauperism
n. இயலாநிலை, நொடிப்பு நிலை.
pauperize
v. இயலாநிலைப்படுத்து, புற உதவி நாடும் பழக்கத்துக்கு ஆளாக்கு.
pause
n. இடை ஓய்வு, இடைத் தயக்கம், இடை நிறுத்தம், பேச்சிடை ஓய்வு, படிப்பிடைத் தயக்கம், (இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி, (வினை.) இடைத்தயங்கு, இடையே சிறிதுநிறுத்து, காத்திரு, மெல்ல நிறுத்திச் செல், நின்று தயங்கி மேற்செல்.
pavage
n. தளவரிசைக்கூலி, தளவரிசை வரியுரிமை.
pavan
n. வினோதக் கூத்துவகை.
pave
-1 v. தளவரிசையமை, மீதாகப் பரப்பு, முன்னேற்பாடு செய்.
pavement
n. தளவரிசையிட்ட பகுதி, நடைபாதைத் தளம், (வில.) பாவுதளம் போன்ற பல்லமைவு.
pavement-artist
n. நடைபாதை ஓவியக்கவிஞர், வழி செல்பவரிடமிருந்து பணம் பெறுவதற்காக நடைபாதையில் வண்ண ஓவியம் தீட்டுங் கலைஞர்.