English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pathogenesis
n. நோய்த்தோற்ற வகை.
pathogenetic, pathogenic, pathogenous
a. நோய் உண்டு பண்ணுகிற, பிணி தோற்றுவிக்கிற.
pathognomonic
a. நோய் இன்னதென்று குறிப்பிட்டுக் காட்டுகிற.
pathognomy
n. உணர்ச்சி ஆய்வியல்.
pathologist
n. நோய்க் குறியாய்வு வல்லுநர், நோயக்குணநுல் வல்லுநர்.
pathology
n. நோய்க்குண நுல், நோய்க்குறி நுல், உணர்ச்சியாய்வு நுல்.
pathos
n. அவலச்சுவை, உணர்ச்சிக்கனிவு, இரக்கப்பண்பு.
patience
n. பொறுமை, இடையறா ஊக்கம், நோய்தோன்றல், பொறுக்கும் எல்லை, ஒருவரே ஆடுஞ் சீட்டாட்ட வகை.
patience-dock
n. செடிவகை.
patient
n. நோயர், நோய்நோற்பவர், மருத்துவரின் வாடிக்கையர், (பெ.) பொறுமையுள்ள, பொறுத்துக்கொள்கிற, நீடித்துக் தாங்கும் ஆற்றலுடைய, விடா ஊக்கமுடைய, ஏற்கிற, பொருள்கோளுக்கு இடந்தருகிற.
patina
n. பழைய வெண்கலப் பொருள்களுக்குரிய அழகுப் பசுங்களிம் பேற்றம், பசுங்களிம்பு, உலோகக் களிம்பின் மென்படலம், பண்டை ரோமாபுரிப் பாணியில் பதந்தகன்ற தட்டம், திருவுணா வழிபாட்டுத தட்டம்.
patois
n. சேரிமொழி, திசைமொழி.
patriarch
n. குடி முதல்வன், குடும்பத்தலைவர், குடும்ப ஆட்சி முதல்வர், குலபதி, குல ஆட்சி முதல்வர், இன ஆட்சி முதல்வர், யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர், முதுவர், முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர், ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர், மூதாளர், இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர், இனத்தின் சிறப்புப்பொருள்.
patriarchal
a. குடும்ப ஆட்சித தலைவருக்குரிய, இன ஆட்சித் தலைவருக்குட்பட்ட, குடும்ப ஆட்சி முதல்வர் போன்ற, இன ஆட்சி முதல்வரியல்புடைய.
patriarchate
n. திருச்சபை முதுவர் பணிநிலை, திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம், திருச்சபை முதுவர் பணிமனி, திருச்சபை முதுவர் உறைவிடம், குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை.
patriarchy
n. குடி முதல்வராட்சி, குடிமுதல்வராட்சி முறைச் சமுதாயம், குடிமுதல்வர் ஆட்சிமுறை அரசு.
patrician
n. பண்டை ரோமாபுரி உயர்குடியுரிமையாளர், ரோமாபுரிப் பேரரசின் உயர் உரிமைக் குடியாளர், ரோமாபுரிப் பேரரசின் தொலை மாகாணங்களில் பேரரசர், பேராளர், இத்தாலியக் குடியரசுகளில் உயர்குடித் தலைவர், உயர்குடியாளர், ஆட்சிக்குடி உரிமையாளர், (பெ.) பண்டைரோமாபுரியில் உயர் ஆட்சி வகுப்புக்குரிய, உயர்குடிப்பிறந்த, உயர்குடிசார்ந்த.