English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
patch-pocket
n. சட்டைவெட்டுப் பை, துண்டொட்டுப் பை.
patch-work
n. ஒட்டுவேலை, பன்னிற ஒட்டிணைவு, பல்வகை ஒட்டிணைவு.
pate
-1 n. (பே-வ.) தலை, மூளை.
patella
n. முழந்தாள் முட்டுச்சில்லு, கால்முட்டெலும்பு சிறுதட்டம்.
patellar
a. கால்முட்டுச் சில்லுக்குரிய.
patellate
a. குவி தட்டம் போன்ற, சிப்பியுருவான.
patent
n. காப்புரிமைப் பட்டயம், புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை, தனிச்சிறப்புரிமை, தனியுரிமைச் சான்றிதழ், உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை, தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை, சிறப்புச்சின்னம், பண்புச்சின்னம், (பெ.) தனிக்காப்புரிமையுடைய, உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை, தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை, சிறப்புச் சின்னம், பண்புச்சின்னம், (பெ.) தனிக்காப்புரிமையுடைய, உரிமைக் காப்புடைய, தனியுரிமைச் சான்றுடைய, தனி உரிமைத் தொடர்பினையுடைய, (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த, காப்புரிமை பெறத்தக்க, திறந்த, வெளிப்படையான, தௌிவான, மேலீடாகவே தெரிகிற, (வினை.) தனிக் காப்புரிமை பெறு, அரசியற் கட்டய உரிமைபெறு.
patent-roll
n. பட்டய உரிமை பெற்றோர் பெயர்த்தொகுதிப் பட்டியல்.
patentee
n. காப்புரிமைச்சீட்டு எடுப்பவர், தனியுரிமைப்பட்டயம், பெற்றிருப்பவர், பட்டய உரிமைப் பயன்பெறுபவர்.
paterfamilias
n. குடும்பத் தலைவர், தந்தை.
paternal
a. தந்தையினுடைய, தந்தைக்குரிய, தந்தைவழியான, தந்தைவழி உறவுடைய, தந்தை போன்ற, தந்தையின் அன்புடைய.
paternity
n. தந்தைமை, தந்தையாயிருக்குந் தன்மை, தந்தைத் தொடர்பு, தந்தை வழியில் பிறப்பு மூலம், ஆக்கியோன் நிலை, ஆசிரிய உரிமை, ஆக்கமூலம், தோற்றமூலம்.
paternoster
n. இறைவழிபாட்டு வாசம், இறைவழிபாடு, சமய மேடையுரை, அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு, செபமாலை, அக்கமாலை போன்ற பொருள், இடையிடையே கொக்கியுடைய, தூண்டில், (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை.
path
n. வழி, காலடிப்பாதை, நடைப்பாதை, பந்தயஓட்ட மிதிவண்டிகளுக்கு வழிகாட்டும் நெறிவரை, செல்நெறி, செயல் நெறிமுறை, வழிவகை, நெறிமுறை.
Pathan
n. பட்டாணியர், ஆப்கன் நாட்டவர், ஆப்கன் நாட்டினத்தவர்.
pathetic
a. இரக்கந் தூண்டுகிற, இரங்குகிற, இரக்கமான, துயார்ந்த, சோகமான.
pathetics
n.pl. சோக உணர்ச்சி தூண்டுதல், கழிபேர் அவலம்.
pathfinder
n. புதுநிலங் காண்பவர், புதுவழி நாடுபவர், குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம்.
pathic
n. இயல்பல் புணர்ச்சிச் சிறுக்கன், (பெ.) செயலுக்கு ஆட்படுகிற, தன்செயலற்றுச் செயல் ஏற்கிற.
pathless
a. வழியற்ற, முன்சுவடற்ற.