English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
pastil. pastille
n. நறுமணத் தூபர் சுருள், சிறு நறுமணத் தின்பண்டம், இனிப்புக்கலந்த மருந்து வில்லை,
pastime
n. பொழுதுபோக்கு, விளையாட்டு, களியாட்டம், நேரப்போக்குமுறை.
pastor
n. நல்லாயர், மேய்ப்பர், குருபோதகர், திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு, ஆன்மிக வழிகாட்டி, கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
pastoral
n. நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம், முல்லைத்திணைப்பாட்டு, முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம், சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம், (பெ.) ஆயர்களைச் சார்ந்த, நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற, பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற, சமயகுரு சார்ந்த.
pastorale
n. நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல், முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
pastoralism
n. முல்லைத்திணைப் பண்பு, நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.
pastorate
n. சமயகுருவின் பதவி, சமயகுருவின் பதவிக்காலம், சமய குருமார் குழு.
pastry
n. பிசைந்து வேகவைத்த மாவு, அடை, அப்பவகை, மாப்பண்டப் பண்ணியம்.
pastry-cook
n. மாப்பண்டஞ் செய்பவர்.
pasturable
a. மேய்ச்சலுக்கு உகந்த.
pasturage
n. மேய்ப்பு, ஆகிரை மேய்த்தல், மேய்ச்சல் நிலம்.
pasture
n. கால்நடைத் தீவனம், மேய்ச்சல் பசும்புல் தரை, பசும்புல் நிலம், (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ, கால்நடைகளை மேயவிடு, ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய், ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
pasty
-1 n. இறைச்சி-பழம் முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல்.
pasty-faced
a. வெளிறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
pat
-1 n. தட்டிக் கொடுத்தல், சொட்டு, ஆதரவுக்குறிப்பு, மெச்சுதற் குறிப்பு, திரளை, வெண்ணெய் முதலியவற்றின் வகையில் மெல்லத்தட்டி உருவாக்கிய உருளை, (வினை.) தட்டு,கொட்டு, தட்டித் தட்டையாக்கு, தட்டிக்கொடு, விரஷ்ல் தட்டி ஒத்துணர்வுகாட்டு, முதுகில் தட்டித்தடளவி ஆதுரவு தெரிவி, ஆதரவு காட்டு, மெச்சு, ஊக்குதல் தெரிவி.
pat-a-cake
n. குழந்தைப் பாடல் தொடக்க வாசகம், குழந்தை விளையாட்டு வகை.
pat-ball
n. புல்வெளிப் பந்தாட்ட வகை.
patagium
n. வெளவாலினத்தின் இறக்கைச் சவ்வு.
patavinity
n. லத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
patch
n. ஒட்டு, வட்டப்பட்டை, அகலப்பொட்டு, ஒட்டுத்தையல் துண்டு, காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு, கண்தடைக்கட்டு, சுட்டி, பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை, பாத்தி, நிலத்துண்டம், பத்தை, துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி, எச்சமிச்சம், இடையிடைப்பகுதி, இடைவெட்டு, 1ஹ்,1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு, (வினை.) ஒட்டுத் தையலிடு, ஒட்டுப்போடு, ஒட்டுத்துண்டால் சரிசெய், ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு, ஒட்டிட்டுச் சரிசெய், துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று, சந்துசெய், அமைத்திணக்குவி, சீர்செய், அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய், ஒட்டுக்களிணைத்து உருவாக்கு, துண்டுகளை ஒட்டி இணை, பொட்டுப்பொட்டாகத் தோற்று, பட்டைபட்டையாகத் தென்படு.