English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
passat
a. (கட்.) மரபுச்சின்னத்திற் காணப்படும் விலங்குவகையில் வலப்பக்க முன்னங்கால் தூக்கிய நிலையில் வலப்பக்கம் நோக்கி நடக்கிற.
passbook
n. பற்றுவரவு ஏடு, வைப்பீட்டாளர் பணம் போடு வதையும் எடுப்பதையும் காட்டும் பொருளாகக் கணக்கேடு.
passe
a. இளமை கடந்துவிட்ட, காலநிலை கடந்துவிட்ட.
passe menterie
n. பொன்-வெள்ளிச் சரிகை மணிகள் வாரிழை முதலியவற்றைக் கொண்டு செய்த ஒப்பனை.
passe-partout
n. பொதுச்சாவி, பல பூட்டொருகோல், நிழற்படச்சட்டம், விளிம்புகளில் ஒட்டுநாடாவைக் கொண்டு இணைக்கப்படும் இரண்டு கண்ணாடிப் பானங்களைக் கொண்ட படச்சட்டம்.
passee
a. பெணவகையில் எழிற்பருவம் கடந்துவிட்ட.
passenger
n. பயணர், (பே-வ.) செயல்துறை உழைப்பில் ஈடுபடாக் குழுவினர்.
passenger-pigeon
n. நெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை.
passer
n. கடந்து செல்பவர், தேர்வில் தேறுபவர், கடந்து செல்விப்பவர், தேறுபவிப்பவர், பொருள்களை வேறு வேலையாள் கைக்கு மாற்றுபவர்.
passer-by
n. வழிச்சொல்வோர்.
passerine
n. கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை, (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த, சிட்டுக்குருவியின் அளவுள்ள.
passible
a. (இறை.) உணர்ச்சியுடைய, துன்பமுணரக்கூடிய.
passim
adv. ஏட்டுரை மேற்கொள் சுட்டுவகையில் எல்லா இடங்களிலும், முழுவதிலும், பரவலாக.
passimeter
n. பயணச்சீட்டுத் தானியங்கி.
passimist
n. நம்பிக்கையற்றவர், தோல்வி மனப்பான்மையர், எதிலுந் தீயதையே காண்பவர், துன்ப இயற்கைக் கோட்பாட்டாளர்.
passing
n. கடந்துசெல்லுதல், தேர்வில் தேறுதல், கடந்து செல்வித்தல், தேறுவித்தல், கடந்துசெல்லுமிடம், முடிவுறுதல், இறப்பு, பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வெள்ளி இழை, (பெ.) அருகே செல்கிற, ஊடே செல்கிற, விட்டுச்செல்கிற, நிலையற்ற, விரைந்தோடுகிற, நன்குஆராயாத, தற்செயலான, (வினையடை.) கடந்துசென்றுகொண்டு, நிலையற்று, விரைந்தோடி, நன்குஆராயாமல், தற்செயலாக.
passion
n. உவ்ர்ச்சி, அடங்காக் கோபம், அடங்காப் பாலிணை விழைவு, மிகு காமம், வெறி உணர்ச்சி, பேரார்வம், (வினை.) (செய்.) உணர்ச்சி கொள், பேரார்வங்காட்டு.
passion-flower
n. இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
passion-play
n. இயேசுநாதரது துன்பங்களையும் இறப்பினையுங் காட்டும் சமயநாடகம்.