English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
partridge-wood
n. தச்சுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கடினமான சிவப்புக்கட்டை வகை, சில காளான் வகைகளால் சட்டைகளின் மேல் தோன்றும் புள்ளிகள்.
parts
n.pl. இடங்கள், நிலப்பகுதிகள், திறமை, அறிவுத்திறம், விலங்குடம்பின் பகுதிகள்.
parturient
a. ஈனுகிற, ஈனுந்தறுவாயிலுள்ள, கருவுயிர்ப்புச் சார்ந்த, கருத்துப் படைப்புச் சார்ந்த, புத்துருவாக்கும் நிலையிலுள்ள.
parturition
n. பிள்ளைப்பேறு, பிறப்பு, புதுத்தோற்றம்.
parturiunt montes, nascetur ridiculus mus.
மலைகள் கருவுயிர்த்து எலியைப் பெற்றன, மிகப் பெருமுயற்சி அற்பப் பயன்.
party
n. கட்சி, கூட்டத்தார், சேகரத்தார், நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர், பயணக்குழு, ஒரு தொழிலர் குழு, விருந்தினர் கூட்டம், வழக்கில் ஒருதிறத்தளவர், ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர், மணவினையில் ஒருதரப்பினர், மணமகன், மணமகள், உடந்தையாளர், ஒத்து உதவுபவர், ஆள், (பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட, சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
parvenu
n. பெருவாழ்வு அற்பர், யாணரார்.
parvis
n. வளைமுற்றம், திருக்கோயில் முதலியவற்றின் எதிரிலுள்ள அடைப்பிட்ட நிலப்பரப்பு.
pas
n. முந்துரிமை, முந்துநிலை, ஆடல் அடிபெயர்ப்புமுறை.
pas de deux
n. ஒருவர் அல்லது இருவர்க்கான நடனவகை.
paschal
a. இயேசுநாதர் உயிர்த்தெழுந்த திருநாள் பற்றிய, யூதர்களின் விடுதலைத் திருவிழா சார்ந்த.
pasha,pasha
பாஷா, உயர்தரத் துருக்கிய அதிகாரி, துருக்கிய படைத்தலைவர், துருக்கி மாகாண ஆளுநர்.
pashalic
n. பாஷாவின் ஆட்சி வரம்பு.
pashm
n. காசுமீரச் சால்வைகள் செய்வதற்குப் பயன்படும் திபேத்திய வெள்ளாடுகளின் அடிமென்மயிர்.
pasque-flower
n. மணிவடிவ ஊதா மலர்ச் செடிவகை.
pasquinade
n. வசைப்பாட்டு, பழிப்புரை, அங்கதம்.
pass
n. தேர்ச்சி, தேறுதல், பொதுநிலைத் தேர்வு வெற்றி, நெருக்கடி நிலை, நுழைவு இசைவுச்சீட்டு, வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு, விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு, வாட்போரில் குத்துதல், கண்கட்டு மாயம், கை மாயம், கை தடவுஞ் சமிக்கை, பந்து கைமாற்றம், பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல், கணவாய், மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை, (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய், ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால், மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி, (வினை.) முந்து, மேலே செல், முன்னேறு, புழங்கு, வழக்காற்றிலிரு, இடம்விட்டு இடம் மாற்றப்பெறு, மாறுதலுறு, சா, இற, கடந்து செல், கழிவுறு, முடிவுறு, சேரிடத்துக்குக் கொண்டுபோ, கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர், வழிவகுத்துக்கொண்டு செல், கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள், போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு, மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு, வேட்பாளர் வகையில் தேறு, தேர்ச்சியடை, தேர்வாளருக்கு மனநிறைவளி, நிகழ், நேரிடு, செய்யப்பெறு, சொல்லப்பெறு, நடுத்தீர்ப்புக்கூறு, தீர்ப்புவகையில் வழங்கப்பெறு, சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு, ஆட்டத்திலிருந்து விலகிக்கொள், பின் தங்கும்படி விட்டுச்செல், தாண்டிச்செல், சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு, தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து, விஞ்சு, மேம்படு, அறிவாற்றலைக் கடந்ததாயிரு, அனுப்பு, இயக்கு, நகர்த்து, செலுத்து, காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து, கடந்து போகச் செய், தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய், சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று, காலவகையில் கழி, கொடுத்துவிடு, வழங்கு, செலாவணியிலிருக்கச் செய், சூள்உரை, கண்டித்துப்பேசு.
passable
a. கடந்து செல்லக்கூடிய, பயணஞ் செய்யத்தக்க, நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க, ஒப்புக் கொள்ளக்கூடிய, மட்டாக நல்லதான, பொறுத்துக்கொள்ளக்கூடிய, புறக்கணித்துவிடத்தக்க.
passage
-1 n. சேறல், செலவு, பெயர்ச்சி, நிலைமாற்றம், ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல், ஊடே செல்வதற்கான உரிமை, கப்பற்பயணம், பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை, சட்டமாக நிறைவேற்றுதல், செல்லும் வழி, நடை, இடைசுழி, ஏட்டுரைப்பகுதி.
passages
n.pl. இருவர்க்கிடையே நடக்கும் விவகாரங்கள், ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுதல்.