English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
participation
n. பங்கேற்றல், கலந்துகொள்ளுதல், பங்குபற்றுதல்.
participle
n. பெயரடை வினைச்சொற்களுக்கு ஒத்தசொல்.
particle
n. துகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு.
particoloured
a. இருநிற இடைக்கலப்புடைய, சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள, பலவகைப் பட்ட.
particular
n. நுணுக்க விவரம், தனியுரு, தனியொருமை உறுப்பு, சிறப்பு (பெ.) குறிப்பிட்ட, தனிப்பட்ட, சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய, (அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற, மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற, தனியான, கவனத்துக்குரிய, நுணுக்கமான, சரிநுட்பமான, மிகு கண்டிப்பான, தனிப்படுசுவைத்திறமுடைய, தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய.
particularism
n. மனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நறிகதியுங் கிடைக்குமென்னுங் கோட்பாடு, கட்சி-பிரிவு முதலியவற்றினிடம் தனிப்பட்ட ஈடுபாடு, பேரரசில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் உரிமை வழங்குவதென்னுங் கோட்பாடு.
particularity
n. தனிப்பட்ட தாயிருக்குந் தன்மை, சிறப்பியல்பு, நுணுக்கவிவஜ்ம், குறிப்பிட்டசெய்தி.
particularize
v. தனிப்படக் குறிப்பிட்டுக்கூறு, தனியாகக் குறிப்பிடு, ஒவ்வொன்றாக எடுத்துச்சொல், விவரங்களைக் குறிப்பிடு.
particularly
adv. தனிமுறையில், தனிப்பட, வகைவகையாக, விவரமாமக, பகுதி வாசக முறையில், குறிப்பிடத்தக்க முறையில், முனைப்பாக, குறிப்பாக.
particulars
n.pl. நுணுக்க விவரங்கள், விவர வரலாறு, விவரக்கணக்கு.
parting
n. பிரித்தல், பிரிதல், பிரியுமிடம், வகுக்கப்படுமிடம், வகுப்பு, வகிடு, பிரிக்குங் கோடு, விடைபெற்றுப்போதல், (பெ.) பிரிக்கிற, வகுக்கிற, புறப்பட்டுச்செல்கிற, விடைபெற்றுப்போகிற, விடைபெறுதற்குரிய, விடைபெறும் நேரத்திலான.
partisan
-1 n. கட்சிக்காரர், கட்சி-கொள்கை, முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர், (படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர், இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல் எதிர்த்தவர், (பெ.) கட்சிப்பற்றுடைய, பட்சபாதமான, கோட்டமுள்ள.
partite
a. (தாவ., பூச்.) கிட்டத்தட்ட அடிவரையில் பிளவுபட்ட.
partition
n. பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு.
partitive
n. திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற சொல், (பெ.) திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற.
partly
adv. ஒரு பகுதியைக் குறித்தமட்டில், அரைகுறையாக, பகுதியளவாக, ஓரளவாக, சிறிதளவாக.
partner
n. கூட்டாளி, பங்காளி, துணைவர், மனைவி, கணவன், ஆடற்கூட்டாளி, வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி, கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று, (வினை.) இணை, கூட்டு, கூட்டாளியாயிரு.
partners
n.pl. (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு.