English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
parotid
n. காதின் முன்புறத்திலுள்ள சுரப்பி, (பெ.) காதருகில் அமைக்கப்பட்ட.
parotitis
n. பொன்னுக்கு வீங்கி, புட்டாளம்மை.
paroxysm
n. இசிப்பு, வலிப்பு.
paroxytone
n. (இலக்.) கிரேக்க மொழியில் ஈற்றயல் அசைகூர் ஒலியழுத்தங்கொண்ட சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழியின் சொல்வகையில் ஈற்றயல் அசை கூர் ஒலியழுத்தங்கொண்ட.
parpen
n. சுவரில் இருதலை நெடுங்கல்.
parquet
n. மரக்கட்டை எழில்விரிப்பு, (வினை.) மரக்கட்டை எழிற்பரப்பு அமை.
parr
n. சிறு சால்மன் மீன், சால்மன் மீன் குஞ்சு.
parricidal
a. தந்தைக்கொலை சார்ந்த, தந்தைக்கொலைபான்ற, உறவுக்கொலைக்குரிய, நாட்டுப் பகைமைப்பழி சார்ந்த.
parricide
n. தந்தையைக் கொன்றவர், நெருங்கிய உறவினரைக் கொன்றவர், மதிப்பிற்குரியவரைக் கொன்றவர், நாட்டுப் பகைஞர், தந்தைக்கொலை, உறவுக்கொலை, சான்றோர்க் கொலை, நாட்டுப் பகையாண்மை.
parrot
n. கிளி, (வினை.) கிளிபோல் சொன்னதைச் சொல், கிளிபோல் சொன்னதைச் சொல்ல ஆளைப்பழக்கு, கிளிபோலப்பேசு.
parrot-fish
n. கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுமுடைய மீன்வகை.
parry
n. தவிர்த்தல், தடுத்தகற்றுதல், (வினை.) தவிர், தடுத்தகற்று.
parse
v. சொல்லிலக்கணங் கூறு, வாக்கியத்தைக் கூறுகளாகப் பாகுபடுத்தி அவற்றிற்கு விவரங்கூறு.
parsec
n. வான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு.
Parsee
n. பார்சி, பாரசீகரின் பழைய சமய நெறிப்பட்டவர், முற்காலப் பாரசீக மொழி, பாரசீக நாட்டில் சஸ்ஸாணிய மரபினர் காலத்து மொழி.
Parseeism
n. இந்தியா வந்துசேர்ந்த பாரசீகர்களின் சமயம்.
parsimonious
a. மட்டுமீறிச் சிக்கனமான, உலோப குணமுள்ள, ஈயாத.
parsimony
n. செட்டு, சிக்கனம், உலோபம்.
parsley
n. சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வெள்ளை மலர்களையுமுடைய செடிவகை
parsnip
n. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் இள மஞ்சள் நிறக் கிழங்கு, சமையலுக்குரிய இளமஞ்சட் கிழங்கினையும் மஞ்சள் நிற மலர்களையுடைய செடிவகை.