English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
parley
n. சிக்கல் தீர்வுப்பேச்சு, (வினை.) எதிரியுடன் கலந்துபேசு, போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு, பிறிதொரு மொழிபேசு.
parleyvoo
n. பிரஞ்சு மொழி, பிரஞ்சு நாட்டினன், (வினை.) பிரஞ்சு மொழி பேசு.
parliament
n. பிரிட்டனின் சட்டமாமன்றம், இந்திய சட்டமாமன்றம், சட்டமன்றம், பிரஞ்சு நீதிமன்றம், இஞ்சி ரொட்டித்துண்டு.
parliament-cake
n. ரொட்டியப்பம்.
parliamentarian
n. சட்டமன்ற இயலறிஞர், பதினேழாம் நுற்றாண்டு உள்நாட்டுப் போரில் பிரிட்டனின் சட்டமாமன்றச் சார்பாளர், (பெ.) சட்டமாமன்றச் சார்பான, சட்ட மாமன்ற ஆதரவாளரான.
parliamentary
a. சட்டமாமன்றஞ் சார்ந்த, சட்டமாமன்றத்தின் சட்டத்துக்கு உட்பட்ட, சட்ட மாமன்றத்தால் மரபாக நிலைநாட்டப்பட்ட, மொழிகள் வகையில் சட்டமாமன்றத்திற்கூறப்படும் தகுதியுடைய, அவைக்குப் பொருந்திய, நாகரிகன்ன, சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட, சட்டமன்றவிதி மரபுகளுக்குக் கட்டுப்பட்ட, சட்டமாமன்ற ஆதரவான.
parlour
n. முகப்பறை, வீட்டின் வரவேற்பறை, மறைபேச்சறை, துறவிமடங்களில் உரையாடலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி, பொதுப்பணிமனைகளில் உரையாடலுக்கு வாய்ப்புள்ள அறை, வழிமனையின் தனிநிலை உரையாடல் அறை.
parlous
a. இடுக்கண் நிறைந்த, (வினையடை) மிகு முனைப்பாக, மட்டுமீறிய அளவில்.
Parmesan, Parmesan cheese
n. பார்மா என்னுமிடத்திற் செய்யப்படும் பாலடைக்கட்டி வகை.
Parnassian
n. பிரான்சு நாட்டில் 1ஹீம் நுற்றாண்டின் பிற்பகுதியில் கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டைக் கொண்ட குழுவினைச் சார்ந்த கவிஞர், கவிஞர், (பெ.) பண்டைக் கிரேக்கரின் கலைத்தெய்வங்கட்குப் புனிதமான பர்னாசஸ் மலையைச் சார்ந்த, கலைத் தெய்வங்கட்குரிய, கலை கலைக்காகவே என்ற கொள்கையை மேற்கொண்ட கவிஞர் குழுவினைச் சார்ந்த.
Parnassus
n. பண்டைக் கிரேக்க நாட்டில் கலைத்தெய்வங்களுக்குரிய புனித இடமாகக் கருதப்பட்ட மலை, கவிதைகளின் தொகுதி.
Parnellism
n. பார்னல் என்பவரால் 1ஹீஆம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் நடத்தப்பட்ட அயர்லாந்து நாட்டுத் தன்னாட்சிக் கோட்பாடு.
Parnellite
n. பார்னல் என்பவரின் அயர்லாந்து நாட்டுத்தன்னாட்சிக் கொள்கையினைப் பின்பற்றுபவர்.
parochial
a. திருச்சபை ஆட்சி வட்டாரஞ் சார்ந்த, குறுகிய பகுதி சார்ந்த, குறுகிய நோக்கங்கொண்ட, குறுகிய விருப்பு வெறுப்புக்களையுடைய, குறுகிய சுவை உணர்ச்சிப் பாங்குகளையுடைய.
parochialism
n. திருச்சபை வட்டார அடிப்படையான திணையாட்சி முறை, குறுகிய நோக்கம், குறுகிய கோட்பாடு.
parochialize
v. குறுகிய நோக்கமுடையதாக்கு, வட்டாரங்களாக வகுத்தமை, திருச்சபை வட்டாரப் பணிச்செய்.
parody
n. நையாண்டிப் போலி, எழுத்திண்மை-நடிப்பு முதலியவற்றில் குறைபெருக்கிக் காட்டிக் கேலிக்கு ஆளாக்குவது, வலுவில் போலி, பின்பற்றிச் செய்யப்பட்ட மூலத்தின் உயிர்ப்பணியற்றப் போலி, (வினை.) நையாண்டிப் போலி செய்துகாட்டு, நகைப்புக்கிடமாகும்படி குறைகளைப் பெருக்கிக்காட்டு, கேலிககுரியதாக்கிக் காட்டு.
parole
n. நன்னம்பிக்கை உறுதிமொழி, (படை.) வாய்மொழி உறுதி, போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி, (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல், (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
paronomasia
n. செம்மொழிச்சிலேடை.
paronychia
n. விரற்சுற்றி.