English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
paresis
n. (மரு.) அரைகுறை முடக்குவாதம், தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம்.
parget
n. காரை, சாந்து, சுண்ணச்சாந்து, (வினை.) காரைபூசு, சுண்ணாச்சந்து பூசு.
parhelion
n. கதிரவனைச் சுற்றியுள்ள ஒளிவட்டத்திற்போரௌியுள்ள இடம், போலிக்கதிரவன்.
pari mutuel
n. இழந்தவர்களின் பணையப்பொருளை வென்றவர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும் பந்தய வகை.
parI passu
adv. இணையாக, சோடியாக, ஒரே சமயத்தில், சமமாக.
Parian
n. மிக நேர்த்தியான வெண்ணிற மங்குப்பாண்டம், உயாந்த வெள்ளைக்களிமண், (பெ.) வெண்ணிறப் பளிங்குக் கல்லுக்குப் பேர்போன பரோஸ் தீவைச் சார்ந்த.
parietal
n. மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று, (பெ.) புறத்தோடு சார்நத,புறத்தோடுகளுக்குரிய, புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த, (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய, மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த.
Paris
n. பிரஞ்சு நாட்டுத் தலைநகர்.
parish
n. வட்டாரம், சமயகுருவினுடைய மாவட்டக்ர கிளைப்பிரிவு, வட்டாரத்தில் வசிப்பவர்கள்.
parishioner
n. திருச்சபை வட்டாரக் குடிவாணர்.
parishyllabic
a. (இலக்.) கிரேக்க லத்தீன் மொழிகளில் பெயர்ச் சொற்களில் எழுவாயும் பிற ஒருமை வேற்றுமை வடிவங்களும் ஒருங்கே ஒரே எண்ணிக்கை அளவான அசைகளைக்கொண்ட.
Parisian
n. பாரிஸ் நகரத்தவர், (பெ.) பாரிஸ் சார்ந்த.
parity
n. ஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு.
park
n. பூங்கா, திறந்தவெளித்தோட்ட வளாகம், பூங்காமனை,வேலிசூழ்ந்த நாட்டுப்புறத் தோட்டமனை, உந்து வண்டிகள் தங்கிநிற்குமிடம், பாசறையில் பீரங்கி அமைப்பிடம், பாசறைப் படைக்கலவைப்பிடம், பீரங்கித்தொகுப்பு, படைக்கலத்தொகுதி, சேமக்காப்பான தனிச்சோலை வளம், கிளிஞ்சில் வளர்ப்புப்பண்ணை, (வினை.) பூங்காவாக அடைப்புச் செய், பூங்காவாக்கு, பீரங்கிகளைத் தொகுப்பாக்கி வை, உந்து வண்டியைத தங்கல் இடத்திற்கொண்டுநிறுத்து.
parka
n. எஸ்கிமோக்கள் அணியுந் தலைக்கவிகையோடு கூடிய தோல் மேலாடை.
parkin
n. (பே-வ) வெல்லப்பாகும் கூலவகை மாவும் சேர்த்துச் செய்த அப்பவகை.
parlance
n. பேச்சுப்பாங்கு, பரிபாஷை.
parlement
n. (வர.) 1ஹ்ஹீ2 வரை இருந்த பழைய பிரஞ்சு நீதிமன்றம்.
parlementire
n. இடைப் போர் நிறுத்தக் கொடி தாங்குபவர்.