English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
parapet
n. கைப்பிடிச்சுவர், (படை.) மறைகுழிகளுக்கு மறைப்பாக எதிரில் எழுப்பப்படும் மணல்மேடு, படைகளை மறைக்கவும் பாதுகாக்கவும் பதுங்கு குழிகளின் முன் கட்டப்படும் சிறு மதிலரண்.
paraph
n. பிறர் போலியாக இடாமல் தடை செய்வதற்கான கை ஒப்பத்தின் வீச்சு எறிவுக்கோடு.
paraphernalia
n.pl. எடுபிடி கொடி, மூட்டை முடிச்சு, உரிமை மகளிர், பரிவாரம், இயந்திரத்தின் துணைக்கலத்தொகுதி, இணை துணுக்குகள்.
paraphrase
n. பொழிப்புரை, ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு, (வினை.) பொழிப்புரை செய்.
paraplegia
n. உடம்பின் கீழ்ப்பகுதிப் பக்கவாதம்.
parasang
n. மூன்றேகால் மைல்கள் நீலமுடைய பண்டைப் பராசீகத் தொலைவு அளவு.
paraselene
n. நிலா மண்டல ஒளிவட்டத்தில் ஒளிமிக்க இடம், போலிமதி.
parasite
n. சுரண்டி வாழ்பவர், அண்டி வாழ்பவர், அட்டை, புல்லுருவி, ஒட்டுயிர், செடி அல்லது சுவரின் மேல் பற்றி வளருங் கொடிவகை.
parasiticide
n. ஒட்டுயிர்க்கொல்லி.
parasitize
v. ஒட்டுணி போன்று பற்றிப்படர், ஒட்டுயிர் போலச் சுரண்டி வாழ்.
parasynthesis
n. (மொழி.) தொகைச் சொல் வழிச்சொற்பிறப்பு.
parataxis
n. (இலக்.) இணைப்புச் சொற்கள் அல்லது துணைச் சொற்களின்றித் துணையுறுப்பு வாசகங்களை அடுக்குதல்.
paratroops
n.pl. வான்குடை மிதவையில் ஏற்றிச் செல்லப்படும் படைவீரர்கள்.
paratyphoid
n. குடற்காய்ச்சற் போன்ற காய்ச்சல் நோய்.
paravane
n. ஆழ்தடக் கடற்கண்ணி வாரி, கடலடிக் கண்ணிகளின் தளையறுப்பதற்குரிய நீர்முழ்கிபோன்ற ஆழ்தட இழுவைக்கருவி.
parboil
v. அரைகுறையாகக் கொதிக்கவை.
parbuckle
n. பார ஏற்றக்கயிறு, மிடா முதலிய உருளைவடிவப் பொருள்களை ஏற்றி இறக்கப் பயன்படுங்கயிறு, (வினை.) பார ஏற்றக் கயிற்றினால் ஏற்ற இறங்கஞ் செய்.
parcel
n. சிறு கூறு, பகுதி, சிப்பம், பொட்டலம், உருப்படிக்கட்டு, உருப்படி, வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு, (வினை.) பகுதிகளாகப் பிரி, (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி, இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcel service
சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்