English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
parachronism
n. காலக்கணிப்பு வழு, கால ஆராய்ச்சித்தவறு.
parachute
n. வான்குடை மிதவை, வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி, (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு, வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு.
paraclete
n. வழக்குப் பரிந்துரையாளர், தூய ஆவிக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று.
parade
n. படையணித் திரட்டு, நாள்முறை அணிவகுப்பு, அமணிவகுப்புக் காட்சி, அணிவகுப்புக்களம், படையணிச் சதுக்கம், பொதுவெளி அரங்கம்,(வினை.) படையணி திரட்டு, காட்சிக்காக அணிவகுப்பு நடத்து, படையணியாக ஊர்வலஞ் செல், பகட்டாரவாரமாகச் செல், பகட்டாரவாரஞ்செய், பகட்டாக விளம்பரப்படுத்து.
paradigm
n. இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடு, கட்டளைப்படிவ வாய்ப்பாடு.
paradise
n. விண்ணுலகு, சுவர்க்கம், துறக்கம், ஏதேன்தோட்டம், பேரின்ப இடம், பெருமகிழ்வுநிலை.
parados
n. மதகரண் அடைகரை.
paradox
n. முரணுரை, பொருந்தாவுரை, புதிர், முரண்படு செய்தி, புதிரீடு, முரண்படு மெய்ம்மை, முரணுரைபோலத் தோன்றும் மெய்யுரை, புரியாப் புதிர், ஏற்றுக்கொள்ளப்பட்ட இயல்புக்கு மாறான செய்தி, புதிரீட்டாளர், நம்ப முடியாதவர், புரிய முடியாதவர்.
paradoxure
n. புனுகுப்பூனை வகை.
paraffin
n. கன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி.
paragoge
n. (இலக்.) பகுதிப்பொருள் விகுதி.
paragon
n. ஏண், இணை முழுநிறை வைரமணி, (வினை.) ஒப்பிடு, இணை.
paraheliotropic
a. செடிகளில் ஒளிக்கதிர்களுக்கு இலைகளின் விளிம்புகாட்டிச் சாய்கிற.
paraheliotropism
n. ஒளிக்கதிர்களுக்கு இணைவாக இலைகளைத் திருப்பும் செடிகளின் இயல்பு.
parakeet
n. நீண்ட வாலுடைச் சிறு கிளிவகை.
parakite
n. வான்குடை போன்று செயற்படும் காற்றாடிவகை, விஞ்ஞான ஆய்வு கருதிப் பறக்க விடப்படும் வாலில்லாக் காற்றாடி.
paraleipsis, paralipsis
n. கூறாது கூறலணி.
parallactic
a. விழிக்கோட்ட வழுச்சார்ந்த.
parallax
n. விழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.