English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
papalism
n. போப்பாண்டவர் ஆட்சிமுறை.
papalist
n. போப்பாண்டவரின் ஆதரவாளர், போப்பாதிக்கத்தை ஆதரிப்பவர்.
papalize
v. போப்பாண்டவர் ஆட்சிமுறைக்கு, போப்பாண்டவர் சார்புடையதாக்கு, போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆக்கு, போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆகு.
papaverous
a. கசகசாச் செடிபோன்ற, கசகசாச் செடிக்கு இனமான.
papaw
n. பப்பாளிமரம், பப்பாளிக்காய்.
paper
n. தாள், தாள்துண்டு, கழகத்தில் வாசிப்பதற்கான கட்டுரை, பத்திரம், முறி, செய்தியிதழ், பத்திரிகை, தேர்வு வினாத்தாள், நுழைவுரிமைச் சலுகையாளர், தாள் பணம், காசுமுறி, சுவர்பொதிதாள், பொதிதாள், தாள் பொதிஅளவு, தான் சார்ந்தது, (பெ.) தாளடங்கிய, தாளாலான, தாள்போன்ற, தாள்மீது எழுதப்பட்ட, (வினை.) தாளில் பொதி, தாளால் மூடு, தாளில் மடித்து வை, தாள்விளிம்பு ஒட்டு, தாள் கந்தல் ஒட்டு, தேய்ப்புத்தாளிடு, தாள் பயன்படுத்திச்செய்.
Paper store
தாள்வகைப் பொருளகம், தாள்கடை.
paper-back
n. தாள் அட்டையிட்ட நுல்.
paper-chase
n. தாள் துண்டு ஒட்டப்போட்டி ஆட்டம், தாள்துண்டுகளைக் கிழித்துப் போட்டுக்கொண்டே ஓடுபவரைப் பின்பற்றி, அத்துண்டுகளைக் கைக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து பிடிக்கும் நாட்டுப்புற விளையாட்டு.
paper-hanger
n. சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
paper-hangings
n.pl. சுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள்.
paper-mill
n. தாள் ஆலை, தாள் செய்யப்படும் தொழிற்சாலை.
paper-stainer
n. சுவரில் ஒட்டப்படும் ஒப்பனைத்தாள்கள் செய்பவர்.
paper-weight
n. தாட்கட்டை, தாள் பறக்காமல் மேல்வைக்கப்படும் பளுவுடைய பொருள்.
papier mache
n. பெட்டி-தட்டு முதலியன செய்வதற்கான தாள் ஊறல் கூழ்மொத்தை.
papilionaceous
a. வண்ணத்துப் பூச்சியுருவுடைய.
papilla
n. காம்பு போன்ற உறுப்புப்பகுதி, (தாவ.) சதைப்பற்றுள்ள சிறு முகிழ்.
papillary
a. சதைக்காம்பு போன்ற, சினப்புச் செறிந்த.
papillate
a. சதைக் காம்புகளையுடைய.