English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
papillose
a. சதைக்காம்புகளையுடைய, சினப்புச்செறிந்த, கரணைகள் நிறைந்த.
papist
n. போப்பாண்டவர் ஆதிக்கத்தை ஆதரிப்பவர், ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்.
papoosh, papouche
செருப்பு வகை.
pappus
n. (தாவ.) துய்ச்சிறை.
paprika
n. அங்கேரிய நாட்டிலுள்ள சிவப்பு மிளகு வகை.
paps
n.pl. மலைக் குவடுகள்.
papula. Papule
n. பரு, கொப்புளம், செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ்.
papyraceous
a. தாளின் இயல்புவாய்ந்த, தாளைப்போல் மெல்லிய.
papyrograph
n. பொறித்தகட்டுப் படியெடுப்புக்கருவி, செதுக்குத்தாள் தகட்டினைக்கொண்டு ஆவணங்களுக்குப் படியெடுப்பதற்கான அமைவு.
papyrography
n. பொறித்தகட்டுப் படியெடுப்பு முறை, படம் முதலியன தாளிலிருந்து துத்த நாகத்தகடு முதலியவற்றிற்கு மாற்றப்படுகிற படியெடுக்கும் முறைகள்.
papyrologist
n. பண்டைய புல்தாள் வரைவு ஆய்வாளர்.
papyrology
n. பண்டைய புல்தாள் வரைவு ஆய்வுத்துறை.
papyrus
n. கோரையின நாணற்புல் வகை, ஓலைநாணல்,கோரையின நீர்ப்பூண்டிலிருந்து எகிப்தியர் முதலியோர் செய்த வரைநாள், நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப்படி.
par
-1 n. சமநிலை, படியளவை, சராசரி, பங்கு-பங்குமுதல் ஆகியவற்றின் முகப்புவிலை, குழிப்பந்தாட்ட வகையில் முழுஆட்டத்தில் ஒரு குழிக்கு எடுக்க வேண்டிய வீச்சு அளவு, ஆட்டத்தில் ஒரு தடவைக்கு எடுக்க வேண்டிய அடிகளின் அளவு.
par excellence
adv. தனிச்சிறப்புக் காரணமாக, எல்லாவற்றிற்கும் மேம்பட்டு.
parabasis
n. கிரேக்க இன்பியல் நாடகங்களில் அவையோரை முன்னிலைப்படுத்திக்கவிஞன் பெயரால் பின்னணி இசைக்குழுவினர் பாடும் பாடல்.
parable
n. நீதிக்கதை, உருவகக்கதை, பழமொழி.
parabola
n. சாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
parabolic, parabolical
a. உருவகமாயமைந்த, நீதிக் கதைபோன்ற, நீதிக்கதைக்குரிய, சாய்மாலை வட்டம் போன்ற, சாய்மாலை வட்டத்துக்குரிய, சாய்மாலை வட்ட வடிவான.
paraboloid
n. சாய்மாலை வட்டத் திண்மம், ஒருதிசைக் குறுக்குவெட்டுத் தளங்கள் சாய்மாலை வட்டமாயிருக்கும் பிழம்புரு, சாய்மாலை வட்டச் சுழற்சியால் ஏற்படும் பிழம்பு வடிவம்.