English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
prosaic
a. உரைநடைபோன்ற, புதுமை உணர்ச்சியற்ற, சாதாரணமான, கிளர்ச்சி தராத, எழுச்சியூட்டாத, கவிதைநயமற்ற, அணிநயம் இல்லாத, சாதாரணச் செய்தியியல்புடைய, கவர்ச்சியற்ற.
prosasit
n. உரைநயைளர், கவர்ச்சியற்றவர்.
proscenium
n. நாடக அரங்கு முகப்பு.
proscribe
v. சட்டப் பாதுகாப்பினின்று அகற்று, நாடு கடத்து, துரத்து, வெளியேற்று, விலக்கிவை, கட்டுச்செய், மறுத்துரை, தடைபோடு.
proscription
n. கொலைத் தீர்ப்பு, தடையிடல்.
prose
n. உரைநடை, வசனம், திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை, கவாச்சியற்ற மெய்ச்செய்தி, எழுச்சியுற்ற பேச்சாளர், கவர்ச்சியற்ற, பண்புடையவர், பொதுநிலைச் செய்தி, (வினை.) சலிப்புறப் பேசு,சலிப்புற எழுது, பாவினை உரைநடைப்படுத்து.
prosector
n. உள்ளுறுப்பியலாய்வுப் பயிற்சிக்கான பிண அறுவையாளர், மாவியற் பகுப்பாய்வாளர்.
prosecute
v. மேற் கொண்டு நடத்து, தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு, கல்விவகையில் மேற்கொண்டுபயில், எதிர்வழக்குத்தொடர், ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு, வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
prosecution
n. (சட்.) குற்றவழக்குத் தொடர்வு, குற்றச்சாட்டு, வழக்குத் தொடருங் கட்சியினர், தொழில் வகையில் மேற்கொண்டு தொடர்வு, கல்விவகையில் பயிற்சி நீடிப்பு.
prosecutor
n. குற்றச்சாட்டு வழக்குரைஞர், வழக்குத் தொடுப்பவர், தொடர்பவர்.
proselyte
n. புதுவரவினர், சமயம் மாறியவர், கட்சிமாறியவர், புதுக்கொள்கை ஏற்றவர், யூதமதம் சார்ந்த பிற இனத்தவர், (வினை.) மதமாற்றஞ் செய்.
prosenchyma
n. (தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம்.
prosify
v. உரைநடைப்படுத்து.
prosit
int. பருகுநேர வாழ்த்துக்குறிப்பு, உனக்கு வெற்றிவிளைக என்னுங் குறிப்பு.
prosodist
n. யாப்பிலக்கண ஆசிரியர், செய்யுளிலக்கணவல்லுநர்.
prosody
n. யாப்பிலக்கணம், செய்யுளமைப்பியல்.
prosopopoeia
n. ஆளுருப்டுத்தும் அணி, ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகித்தல்.
prospect
-1 n. காட்சிப்பரப்பு, தொலைக்காட்சி, முகப்புத்தோற்றம், முகப்புத்திசை, ஓவியக்காட்சி, மனக்காட்சி, எதிர்பார்த்தல், எதிர்பார்க்குஞ் செய்தி, வருங்கால வாய்ப்பு, வாய்ப்பு வளம், வெற்றி வாய்ப்புநிலை, வாடிக்கையாளராகத் தக்கவர், வாடிக்கையாளராகக் கூடியவர், ச்நதாதாரராகத் தக்கவர், கனிவள வாய்ப்புப் பகுதி, கனிவள மாதிரிப் பாளம், கனிவள மதிப்புத்தேர்வு.
prospective
a. வருங்கால வாழ்விற்குரிய, எதிர்கால வாய்ப்புக்களை எதிர்நோக்கிய.
prospector
n. கனிவளம் நாடுநர்.