English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
protectory,
n; காப்பாண்மை நிலையம், துணையற்றவர்களுக்கும் பொல்லாத குழந்தைகளுக்கும் ஆதரவளிக்கும் ரோமன் கத்தோலிக்க நிறுவனம்.
protege
n. காப்புட்படுநர், பிறர் பாதுகாவலில் வைக்கப்படுவோர், இன மாணாக்கர்.
proteiform
a. மிகவும் உருமாறதக்க.
protein
n. (வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள்.
proterandrous
a. (தாவ.) சூலகத்திற்கு முன்னரே பூந்துகள் முதிர்ச்சி எய்துகிற.
proterogynous,
a. (தாவ.) பூந்துகளுக்கு முன்பே சூலகம் முதிர்வுகிற.
protest
-1 n. மறுப்புரை, கண்டனம், கண்டன அறவிப்பு, சிறுபான்மை எதிர்ப்பாளரின் கண்டனப்பதிவு, காசுமுறிமுறைப்பட மறுக்கப்பட்டதென்ற பத்திரப் பதிவாளரின் எழுத்தறிவிப்பு, மனமார்ந்த உறுதி அறிவிப்பு.
protestant
-3 n. மறுப்புரையாளர், கண்டன அறிவிப்பாளர்.
protestant(1), Protestant
-2 n. கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர், ஆணை எதிர்ப்பாளர், இடித்துரையாளர், பதினோறாம் நுற்றாண்டிலேற்பட்ட கிறித்தவசீர்திருத்த இயக்கக் கொள்கையைப் பின்பற்றுபவர்.
Protestantism
n. கிறித்தவ சமயத்தில் கத்தோலிக்க கொள்கையை மறுத்துப் பிரிந்து சென்று போப்பாண்டவரின் ஆட்சிக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றுகிற கிறித்தவசமயம்.
protestants(1), Protestants(2),
pl. (வர.) ஸ்பயர்ஸ் சங்க முடிவை எதிர்த்து விலகிச் செர்மனியில் கிறித்தவ சீர்திருத்தக் கோட்பாட்டை ஏற்றவர்கள்.
protestation
n. முறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட கூற்று, முறைப்படி உறுதிப்படுத்திக் கூறுதல், எதிர்ப்பு, மறுப்புரை, கண்டனம்.
Proteus
n. அடிக்கடி மாறுமியல்புள்ளவர், அடிக்கடி மாறும் பொருள், அணுவுடலி அல்லது ஒழுகுடலுடைய அணு உயிரினத்தின் பண்டைப்பெயர், நுண்மவகை, விலங்குபோன்ற உடலும் நான்கு குட்டையான கால்களும் வாலுமுடைய நில-நீர் வாழும் உயிரின வகை, முற்பட்ட வழக்கில் வயிற்றுடலி.
prothalamion, prothalamium
n. ஸ்பென்சர் என்ற கவிஞரால் இயற்றப்பட்ட மணவிழாவிற்கு முற்பட்ட பாடல்.
prothesis
n. திருவுணா வழிபாட்டுக்கலங்கள் வைக்கப்படும் மேசை, திருவுணாக்கலங்கள் வைக்கப்படும் திருக்கோயிற் பகுதி.
protista
n. pl. விலங்கு தாவரப்பிரிவுகளில் ஒன்றில் மாத்திரம் படாத ஓரணு உயிர்ப்பிரிவு.
proto-Arabic
a. அராபியர்களின் ஆதிமுன்னோர் சார்ந்த.
proto-Celtic
a. கெல்டிய இனத்தவரின் ஆதிமுன்னோரைச் சார்ந்த.
proto-theria
n. pl. பால்குடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவு சார்ந்த விலங்குகள், பால்குடி இனத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உயிரினம்.
protochloride
n. (வேதி.) பாசகம் குறைந்த அளவில் கலந்த சேர்மவகை.