English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
prospectus
n. தகவல் தொகுப்பு அறிக்கை, அமைப்பு விளக்கக் குறிப்பு, திட்ட விளக்க அறிவிப்பு.
prosper
v. வாழ், வளமையுறு, முன்னேற்றமடை, வெற்றிபெறு, வெற்றிபெறச்செய்.
prosperity
n. வளமை, வாழ்வுவளம், வெற்றிப்பொலிவு, நற்பேறு.
prosperous
a. வளப்பமுள்ள, செல்வச் செழிப்பான, வாழ்வில் வெற்றி காண்கிற, மேன்மேலும் முன்னேற்றம் அடைகிற.
prostate
n. பால்குடி உயிர்களில் ஆண்பால் உறுப்புக்கு உடனிணைவான சுரப்பித் திரள்களாலான பெருஞ்சுரப்பி.
prosthesis
n. (இலக்.) முற்சேர்ப்பசை, முற்சேர்ப்பெழுத்து, (அறுவைமரு) உடம்பில் செயற்கையுறுப்புக்கள் இணைத்தல்.
prostitute
n. விலைமகள், பரத்தை, (வினை.) பரத்தையாக்கு, இழிசெயலுக்கு உட்படுத்து, இழிசெயலுக்குப் பயன்படுத்து, உயர்பண்புகளை இழிபயனுக்கு விலைகூறு.
prostitution
n. பரத்தைமை, இழிவுக்குள்ளாக்குதல்.
prostrate
-2 v. நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்து, வீழ்த்து, முறியடி, முழுதும் கீழடக்கு, பணியச்செய், முற்றிலும் வலுவிழக்கச்செய்.
prostyle
n. நாற்றுண் முகப்பு மண்டபம், கிரேக்க திருக்கோயில்களிலுள்ள நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடம், (பெ.) நான்கிற்கு மேற்படாத தூண்கள் கொண்ட நுழைமாடமுடைய.
prosy
a. சலிப்புத்தட்டுகிற, சிறப்பற்ற, எழுச்சியுற்ற, சாரமற்ற.
protagonist
n. முக்கிய நடிகர், கதையின் முக்கிய உறுப்பினர், வாகையர், கோட்பாட்டுப் பரிவுரைஞர்.
protasis
n. பீடிகை வாசகம், ஏஞூற்று வாசகம்.
protean
a. அடிக்கடி மாறுகிற, பல வடிவம் ஏற்கிற, நிலையற்ற.
protect
v. காப்பாற்று, கெடாது தடு, இடரினின்று தடுத்தாளு, பாதுகாப்பு அளி, நாட்டுப் பொருளியல்துறையில் உள்நாட்டுத் தொழில்கட்குக் காப்புச்செய், போட்டியிலிருந்து விலக்கிக் காப்பனி, தாள்முறி-காசுமுறிகளுக்குரிய நிதி ஏற்பாடுசெய், இயந்திரங்களுக்குக் காப்புக் கவசமிடு.
Protect document
ஆவணப்பாதுகாப்பு
protection
n. பாதுகாப்பு, ஆதரவு, ஆதரவளிப்பது, ஆதரவாளர், பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு, காப்புறுதிச் சீட்டு, கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ், உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை.
protective
a. பாதுகாக்கிற, பாதுகாப்பிற்கு உகந்த, பாதுகாப்பு நோக்கங்கொண்ட, உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
protector
n. காப்பாளர், ஆதரவாளர், ஆட்சிக்காவலர், ஆட்சிப் பேராளர், காப்புக்கருவி, காப்புத் துணைப்பொருள்.
protectorate
n. ஆட்சிக்காவலர் பணிநிலை, ஆட்சிக்காவற்காலம், இங்கிலாந்தில் ஆலிவர் கிராம்வெல்-ரிச்சர்டு கிராம்வெல் (1653-165ஹீ) ஆகியோரின் ஆட்சிக்காலம், காப்பாட்சி, பிற்பட்ட பகுதியின் பொறுப்பை ஏற்று முற்பட்ட அரசு நடத்தும் ஏவலாட்சிமுறை.