English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mangosteen
n. (மலாய்) மங்குஸ்தான் பழம், மங்குஸ்தான் மரம்.
mangrove
n. மருந்துக்கும் தோல் பதனிடுவதற்கும் பயன்படும் பட்டையினையுடைய வெப்பமண்டலச் சதுப்புநிலப் படர் தாவர வகை.
mangy
a. மயிரடர்ந்து வங்கு பற்றிய, அழுக்கடைந்த், இழி தோற்றமான.
manhandle
v. மனித ஆற்றலால் மட்டுமே இயக்கு, முரட்டுத் தனமாகப் பிடித்து இழு.
manhattan
n. இன்தேறல் கலவைக் குடிவகை.
manhole
n. புதைச்சாக்கடை வாயிற்புழை, புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு.
mania
n. வெறி, கோட்டி, மூளைக்கோளாறு, மனமாறாட்டக் கோளாறு, பேரார்வம், மட்டுமீறிய ஆவர், உணர்ச்சியார்வ மிகை.
maniac
n. வெறியர், கோட்டிக்காரர்ர, பித்தேறியவர், அறிவிழந்தவர், பித்தர்ர, (பெயரடை) பைத்தியம் பிமடித்த, வெறியான, அறிவிழந்த.
maniacal
a. பைத்தியம் பிடித்த, பைத்தியம் பிடித்தவர்போன்ற.
manic
a. பித்துவெறி சார்ந்த, பித்து வெறிக்கு ஆட்பட்ட.
manic-depressive psychosis
n. இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு.
Manichee
n. இறைவனும் நரகிறையும் நிலைபேறுடைய சரி ஆற்றலுடையவர் என்ற கோட்பாடுடைய முற்காலச் சமயக்கிளையினர்.
manicure
n. கைவிரல் நக ஒப்பனைக்கலை, கைவிரல் நகஒப்பனைக் கலைஞர், (வினை) கை விரல் நகங்களை ஒப்பனைசெய்.
manifest
n. தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல், (பெயரடை) வெளிப்படையான, தௌிவான, (வினை) தௌிவாகக்காட்டு, மெய்ம்மை காட்டு, பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு, வெளிப்படுத்து, வெளிப்படுத்திக்காட்டு, பண்பு உருப்படுத்திக்காட்டு, உருவெளிப்படுத்திக்காட்டு,. கருத்து எடுத்துக்காடடு, சரக்குப் பட்டியலில் பதிவுசெய், கருத்தை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
manifesto
n. கொள்கை விளக்க அறிவிப்பு, அரசியலார் பொது அறிக்கை விளம்பரம், கட்சித் திட்ட அறிவிப்பு, தனியார் கருத்தறிவிப்பு.
manifold
n. பல்புழைவாய் இயந்திர அறை, பல்வாயிற் குழாய், மைத்தாள் படிவுப்படி, (கண) முழு மொத்தம், அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை, (பெயரடை) பன்மடியான, பல்லுருவான, பல்வேறான, பல்வேறு பயனுடைய, பல்தொழில் ஒருங்கு செய்கிற, பல்வகைப் பெருக்கமுடைய, (வினை) பல்படி ஒருங்கெடு, படி பெருக்கு.
manikin
n. சிறு மனிதன், குள்ளன், மூட்டுத்தெரியும்ர ஒட்டுவடிவப் பொம்மை, உடலமைப்பின் மாதிரி, அமெரிக்க வெப்ப மண்டலச் சிறு பறவை.
manilla
-1 n. ஆப்பிரிக்க பழங்குடிகள் நாணயமாக வழங்கும் உலோக வளையல்கள்.
manille
n. நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்ட வகைளில் இரண்டாவது சிறந்த மதிப்புடைய சீட்டு.
manioc
n. மேற்கிந்திய தீவுகளின் கிழங்குடைய செடி வகை, கிழங்கு வகையின் மாவு.