English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
lay(4), v. lie
என்பதன் இறந்தகாலம்.
layer
-1 n. வைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது.
layer-stool
n. நாற்றுமுளைகள் தோற்றுவிக்கப்படும் வேர்.
layers
n. pl. வயலில் சிதறலாக வளர்ச்சிக் குறைவினால் படிந்து கிடக்கும் பயிர்ப்பகுதிகள்.
layette
n. புனிற்றுத் துணைப்பொருள்கள், புதிதாகப் பிறந்த குழவிக்குத் தேவையான உடைகள்-படுக்கை முதலிய துணைப் பொருள்களின் தொகுதி.
layman
n. தீக்கை பெறாதவன், பொதுநிலை மக்களில் ஒருவன், தொழில்-கலை-விஞ்ஞானம்-மருத்துவம் முதலியவற்றில் பயிற்சி பெறாதவர், சாதாரண மனிதர், தனித்துறை சராராதவர், வல்லுநர் குழுவுக்குப் புறம்பானவர்.
layout
n. திட்டம், திட்ட ஏற்பாடு, அமைப்புத் திட்டம், நிலத்திட்டவிடுப்பு, மனைத்திட்ட அமைப்பு.
laystall
n. குப்பைமேடு, குப்பை கூளக் குவியல்.
lazar
n. நோயுற்று நலிந்த ஏழை, தொழுநோயர்.
lazaret, lazaretto
ஏழை நோயாளிகள் மருத்துவமனை, குட்ட நோய் மருத்துவமனை, தொற்றொதுக்கு மனை, தொற்றொதுக்க கப்பல், கப்பலின் பின்புறமுள்ள சரக்குச்சேமப்பகுதி.
lazarus
n. இரவலர், பஞ்சை, ஏழை.
laze
n. (பே-வ.) சோம்பற் காலம் (வினை) சோம்பலாயிரு, சோம்பிக் காலத்தைக்கழி, வீண்பொழுது போக்கு.
lazy
a. சோம்பலான, மந்தமான, மடிமை வாய்ந்த, வேலை செய்ய மனமில்லாத, சோம்பலுக்கேற்ற, சோம்பலைத் தூண்டுகின்ற, (வினை) சோம்பலாயிரு.
lazy-bed
n. ஆறடி அகலமும் இருபுறங்களிலும் நீண்ட பள்ளமுமுள்ள உருளைக்கிழங்குப் பயிர்ப்படுகை.
lazy-bones
n. சோம்பேறி, மந்தமானவர்.
lazy-tongs
n. தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியப்பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு.
lazzarone
n. (இத்.) நேபில்ஸ் நகரத்தில் பலதிறச்சிறு தொழிலும் செய்து பிழைக்கும் தெருச்சுற்றி.
lea
-1 n. (செய்.) பசும்புல் தரை, திறந்த வெளி நிலம்.
leach
v. நீர்மம் கசியவிடு, மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து, கசிவூறல்மூலம் உள்மாசு வெளியேற்று.